பட்டுக்கோட்டை அருகே வீட்டில் உறங்கிக் கொண்டே இளைஞருக்கு கத்திக்குத்து

பட்டுக்கோட்டை அருகே  வீட்டில் உறங்கிக் கொண்டே இளைஞருக்கு கத்திக்குத்து
X

பட்டுக்கோட்டை அருகே மர்மகும்பலால் தாக்கப்பட்ட இளைஞர்

காயமடைந்த விக்னேஸ்வரனை் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பட்டுக்கோட்டை அருகே, வீட்டில் உறங்கிக் கொண்டே இளைஞர் மீது ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பியேடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அனந்த கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் இவருடைய மகன் விக்னேஸ்வரன்( 20.). இவர் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், விக்னேஸ்வரன் மட்டும் வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருக்கும் போது, மர்ம நபர்கள் 5 பேர் திடீரென வீட்டிற்குள் புகுந்து, விக்னேஸ்வரனை கத்தியால் மார்பு பகுதி மற்றும் தலையில் குத்தினர். இதில் விக்னேஸ்வரன் சுருண்டு கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்த பீரோலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த விக்னேஸ்வரனை, அருகில் இருந்த உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை கத்தியால் தாக்கி விட்டு சென்றமர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!