கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்தநாள்: அரசு சார்பில் மரியாதை

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்தநாள்: அரசு சார்பில் மரியாதை
பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரம் அவர்கள் 19 வயதிலேயே கவி புனையும் திறனை கொண்டிருந்தார்

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் உள்ள "மக்கள் கவிஞர்” பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு மணிமண்டபத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் இன்று (13.04.2023) அவரது பிறந்த நாளை முன்னிட்டு திருவு ருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தம்...

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் 13-04-1930 அன்று அருணாச்சலம்-விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக கல்யாணசுந்தரம் பிறந்தார். இவர் பிறந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள செங்கப்படுத்தான்காடு எனும் சிற்றூர் ஆகும்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் தந்தை கவிபாடும் திறனை கொண்டவர் ஆவர். கல்யாணசுந்தரத்திற்கு கணபதி சுந்தரம் என்ற மூத்த சகோதரரும், வேதநாயகி என்ற இளைய சகோதரியும் உள்ளனர்.இவர் பள்ளி படிப்பை மட்டுமே மேற்கொண்ட இவர் அதன்பிறகு திராவிட இயக்கத்திலும், பொதுவுடைமை கொள்கையிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். அதன் பிறகு இவருக்கு கௌரவாம் பால் என்பவருடன் திருமணம் ஆகி குமரவேல் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது, அந்த குழந்தை பிறந்த அதே ஆண்டில் 08-10-1959 அன்று அகால மரணம் அடைந்தார்.

பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரம் அவர்கள் 19 வயதிலேயே கவி புனையும் திறனை கொண்டிருந்தார். அதில் அதிகமான ஆர்வங்களையும் காட்டினார். இவர் பாடல்களின் உருவங்களை காட்டாமல் அதனுடைய உணர்வுகளை காட்டியவர். இவர் குறைகளையும் வளர வேண்டிய நிறைகளையும் சுட்டிக்காட்டும் திறனை கொண்டவர் ஆவார். இவர் திரை அரங்குகளில் பாட்டாளி மக்களுக்காக பல சக்தியுள்ள பாடல்களையும் பாடி இயற்றினார்.இவர் 1954 ஆம் ஆண்டு முதல் முதலில் “படித்த பெண்” என்ற திரைப்படத்திற்கு பாடலை இயற்றி அந்த துறையில் முத்திரையும் படைத்தார்.

பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரம் அவர்கள் சிறுவயதில் இருந்து விவசாயத்தில் அதிக ஆர்வங்களை கொண்டிருந்தார். அதன் பிறகு தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள், சிவராமன், இரணியன் ஆகியோருடன் இணைந்து விவசாய இயக்கத்தை வளர்க்க தீவிரமாகப் பாடுபட்டார். இவர் மாடு மேய்ப்பது, விவசாயம் போன்ற 17 வகையான தொழில்களையும் செய்து கொண்டு இருந்தார். அதன் பிறகு இவருக்கு நடிப்பில் அதிக ஆசைகள் இருந்ததால் “சக்தி நாடக சபா” என்ற இயக்கத்தில் இணைந்து கொண்டார்.

சக்தி நாடக சபாவில் இணைந்து கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் நுழைய தொடங்கினார். கடைசியாக இவர் நடிப்பை விட்டுவிட்டு புரட்சிக்கவி பாரதிதாசனிடம் சேர்ந்து கடைசியில் கவிஞராக உருவானார். இவர் தொடக்கத்தில் விவசாயி, மாடுமேய்ப்பவர், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, உப்பளத் தொழிலாளி, மிஷின் டிரைவர், தண்ணீர் வண்டிக்காரர், அரசியல்வாதி, பாடகர், நடிகர், நடனக்காரர், கவிஞர் போன்ற பதினேழு வகையாக தொழில்களையும் செய்தார்.

பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரம் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு அவரின் நினைவை போற்றவேண்டும் என்றும் வகையில் அவருக்கு “பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபம்” அமைந்துள்ளது. அந்த மணிமண்டபத்தில் அவருடைய வாழ்க்கை வரலாறுகள் தொடர்பான இவருடைய புகைப்படங்கள் கண்காட்சியாக அமைக்கப்பட்டன.

Tags

Next Story