வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
X
பட்டுக்கோட்டையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜி.ஆனந்த்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இயக்குநர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஜி.ஆனந்த் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இயக்குநர்ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஜி.ஆனந்த் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் ஆகியோர் பேரிடர் காலத்தில் மீட்பு பணிகள் செய்வதற்கான உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

பட்டுக்கோட்டை வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் பேரிடர் தடுப்பு பணிக்காக மரம் வெட்டும் கருவிகள் தயார் நிலையில் இருப்பதையும், பட்டுக்கோட்டை நீர்வள ஆதாரத்துறை சார்பில் அக்னியாறுவடிநில கோட்ட அலுவலகத்தில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதையும், துவரங்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில்மரம் அகற்றும் கருவிகளையும், தம்பிக்கோட்டை சரக வருவாய் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகளையும், நரசிங்கபுரம் ஊராட்சியில் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மைய கட்டடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேரிடர் தடுப்பு முன்னேற்பாடு பணிகளையும், ராஜாமடம் கீழத்தோட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புயல் பாதுகாப்பு மையத்தையும், பல்நோக்கு பேரிடர் மைய கட்டடத்தையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இயக்குநர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஜி.ஆனந்த் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். தேவையான முன்னேற்பாடு பணிகளை கவனமாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார்கள்.

இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி (பட்டுக்கோட்டை), ஊராட்சிகள் உதவி இயக்குநர் சங்கர், நகர் மன்றத் தலைவர் சண்முகப்பிரியா செல்வகுமார் (பட்டுக்கோட்டை), நகராட்சி ஆணையர் குமரன், செயற் பொறியாளர் (நீர்வள ஆதாரத்துறை) அய்யம்பெருமாள், உதவி செயற்பொறியாளர்கள் (நீர்வளத் துறை) கல்லணை கால்வாய் .ஆர்.இளங்கண்ணன், ஆர்.சீனிவாசன் எம்.மணிகண்டன், வட்டாட்சியர் சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்