மானிய விலையில் மண்புழு உரம் : விவசாயிகளுக்கு வழங்கல்..!
மானிய விலையில் மண்புழு உரம் வழங்கிய பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை. உடன் மதுக்கூர் வேளாண் துணை இயக்குனர் திலகவதி.
மண்ணை வளமாக்கும் மண்புழு உர உற்பத்தியை ஊக்குவிக்க மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு மானியத்தில் மண்புழு உர படுக்கைகளை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை வழங்கினார்
தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டாரத்திற்கு 30 மண்புழு உர படுக்கைகள் தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனரால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம் வைத்துள்ள மற்றும் கடந்த இரண்டு வருடங்களில் மத்திய மாநில அரசுகளின் மண்புழு உர படுக்கைகள் பெறாத விவசாயிகள் மற்றும் கால்நடை வைத்திருக்கும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலரை அணுகி உழவர் செயலியில் பதிவு செய்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டது.
விவசாயிகளுக்கு மண்புழு உர படுக்கைகளை வழங்கிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்
சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை விவசாயிகள் மண்ணை வளமாக்கும் மண்புழு உரத்தினை உற்பத்தி செய்து அதை விவசாயிகள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் மண்ணில் உள்ள உயிர்ம கரிமச்சத்தினை அதிகரித்து மண் வளத்தினை மேம்படுத்துவதுடன் பண்ணை கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் பண்ணை கழிவுகளை திறம்பட கையாள முடிகிறது.
மேலும் விவசாயிகளின் உரச் அளவை குறைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் மாண்புமிகு தமிழக முதல்வரால் இத்திட்டம் துவக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது ஆர்வமுள்ள விவசாயிகள் மண்புழு உர படுக்கைகளை மானியத்தில் பெற்று இயற்கை உர உற்பத்தினை அதிகரித்து செயற்கை உரங்களுக்கான செலவினத்தை குறைக்க வேண்டும் என விவசாயிகளை கேட்டுக்கொண்டார்.
பின் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அட்மா திட்ட தலைவர் இளங்கோ மத்திய திட்ட வட்டார உறுப்பினர் கோவிந்தராஜ் அண்டமி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி பாஸ்கரன் கன்னியாகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வேம்பரசி தமிழரசன் நெம்மேலி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சனி ராஜராஜன் கீழ குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மானியத்தில் மண்புழு உர படுக்கைகளை வழங்கினர்.
வேளாண் உதவி இயக்குனர் திலகவதி 12*4*2 என்ற அளவில் வழங்கப்படும் மண்புழு உர படுக்கைகளில் தேவையான அளவு ஈரத்துடன் உள்ள வெப்பம் குறைந்த இலை தழை குப்பைகள் மற்றும் கால்நடை கழிவுகள் ஆகியவற்றைத் தொட்டியில் இட்டு அதில் இரண்டு முதல் மூன்று கிலோ அளவிலான மண் புழுக்களை விட வேண்டும். மண்புழு உர படுக்கைகளின் வெளிப்புறத்தில் நிழலான இடங்களில் மண்புழு உர படுக்கைகளை நிறுத்தி வைக்க தேவையான குச்சி பொருத்திகள் அமைக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் கம்புகளை குச்சி பொருத்திகளுக்கு நேராக மண்ணில் துளையிட்டு அதில் மண்புழு படுக்கைகளை மிக எளிதாக பொருத்த முடியும் வகையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இதனை பயன்படுத்தி தங்கள் இல்லங்கள் வயலைச் சுற்றியுள்ள விவசாயம் மற்றும் கால்நடை கழிவுகளை பயன்படுத்தி எளிதாக குறைந்த செலவில் அதிக பலன் அளிக்கும் மண்புழு உரத்தினை தயாரிக்கலாம்.
இதன் மூலம் விவசாயிகளுக்கு உரச் செலவு குறைவதோடு நஞ்சில்லா உணவு உற்பத்தியிலும் பெரும்பங்கு வகிக்க முடியும் என்ன விவசாயிகளை கேட்டுக்கொண்டார். மேலும் மண்புழு உர படுக்கைகளில் உற்பத்தி செய்யப்படும் மண்புழு உரத்தினை மாதவாரியாக தனி பதிவேட்டில் குறித்து பராமரிக்கவும் கேட்டுக் கொண்டார்.
வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன் ஜெரால்டு சுரேஷ் முருகேஷ் தினேஷ் மற்றும் ராமு ஆகியோர்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அட்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா ராஜு அய்யா மணி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu