நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம்: வணிகர்களுக்கு பயிற்சிப்பட்டறை

நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம்: வணிகர்களுக்கு பயிற்சிப்பட்டறை

பைல் படம்

பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகள் வருகின்றன.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி ரத்னமகால் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் என்பதனை வலியுறுத்தி வணிகர்களுக்கான பயிற்சிப் பட்டறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்டஆட்சித்தலைவர் பேசியதாவது: தமிழ்நாடுமுதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடுமாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம் சார்பில் "நெகிழிமாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் என்பதனை வழியுறுத்தி வணிகர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெறுகிறது.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடைஅறிவிப்பு தமிழ்நாடுஅரசால் வெளியிடப்பட்டு அதன்படி, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள் ,அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள்,உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள், பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்கள், பிளாஸ்டிக் கொடிகள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை தயாரிப்பதும், சேமித்து வைப்பதும்,விநியோகிப்பதும் ,போக்குவரத்து செய்வதும்,விற்பதும் மற்றும் உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தேசியபசுமை தீர்ப்பாயம் (தெற்குமண்டலம்) பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர்களுக்கு எதிராக அடிமட்ட அளவில் நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள்,தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் இத ரநிறுவனங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்ததை நிறைவேற்றும் வகையில் அதனை விற்பைனை செய்யும் வணிக நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

முதன் முறையாக வணிக நிறுவனங்களில் பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரமும், துணிக்கடைகளில் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரமும் ,மளிகைகடைகள்,மருந்துகடைகள், நடுத்தரவணிக நிறுவனங்களுக்கு ரூபாய் ஆயிரமும் ,சிறுவணிக நிறுவனங்களுக்கு ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 08.03.23 முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதில் "நெகிழிமாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் என்பதனை வழியுறுத்தி வணிகர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.

முன்னதாக பட்டுக்கோட்டை நகராட்சி உழவர் சந்தைவளாகத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் மாவட் ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுபாடு வாரியத்தின் மூலம் பொது மக்கள் பயன்பாட்டிற்காகரூ.10-க்கான நாணயம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் வகையில் தானியங்கி இயந்திரம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பிளாஸ்டிக்கை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை அல்லது துணிப்பைகளை பயன்படுத்துமாறு துண்டு பிரசுரங்கள் பட்டுக்கோட்டை நகராட்சி உழவர் சந்தையில் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியம், காவாளிபட்டி ஊராட்சி, வீரடிப்பட்டியில் அங்கன்வாடி மைய புதிய கட்டுமான பணி நடைபெற்று வருவதையும், வீரடிப்பட்டியில் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. செவ்வாய் பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுது நீக்கம் செய்யப்பட்ட புதிய கட்டிடத்தினை பார்வையிட்டு, தொடக்கப் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி திறன் குறித்தும், காவாளிபட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள நெற்களத்தில் உளுந்து பயிர் உலர்த்தப் படுவது குறித்தும் பில்லுவெட்டுவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவறை கட்டிட பணிகள் போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டில் கொண்டு வரவேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர் களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெறும் மருத்துவ முகாமினை மாவட்டஆட்சித்தலைவர் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சௌந்தர்ராஜன், தமிழ்நாடு மாசு கட்டுபாடுவாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரா. ரவிக்குமார், மாவட்ட மாற்றுத் திறனாளி நலஅலுவலர் சுவாமிநாதன, வட்டாட்சியர் பழனிவேல் , திருவோணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமாரவடிவேல், அறிவானந்தம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story