தஞ்சை மாவட்டத்தில் நானோயூரியா செயல் விளக்க முகாம்: ஆட்சியர் ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைவட்டம், மதுக்கூர் ஒன்றியத்தில் வேளாண் உழவர் நலத்துறை சார்பில் நடைபெறும் நானோ யூரியா செயல் விளக்கத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைவட்டம், மதுக்கூர் ஒன்றியத்தில் வேளாண் உழவர் நலத்துறை சார்பில் நடைபெறும் நானோ யூரியா செயல் விளக்கத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வடக்கு கிராமத்தில் நானோயூரியா தெளித்த செயல் விளக்க வயலில் ஆய்வு செய்து விவசாயிகள் தங்கள் நெல் வயில்களில் அதிக பச்சை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஏக்கருக்கு 22.5 கிலோ யூரியா போடும் இடத்தில் ஒரு மூட்டை யூரியாவை பயன்படுத்துகின்றனர்.
இதனால் பயிரானது உடனடியாக பச்சை பிடித்து அதிக தழைகளை உண்டாக்கும். இதன் மூலம் அதிக பூச்சிகளையும் வருவிக்கிறது. அடுத்து பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தி இன்னும் அதிக செலவு ஏற்படுத்திக் கொள்கின்றனர். மேலும் யூரியாவானது விரைவில் ஆவியாகும் தன்மை உடையது. நீர் உள்ள வயல்களில் போட்டவுடன் 45 சதவீதத்திற்கும் மேல் நீரில் கரைதல் ஆவியால் மற்றும் நிலத்தடி நீருடன் கலந்து வீணாகிறது நிலமும் நீரும் மாசடைகிறது. அதிகப்படியான உரச் செலவும் ஏற்படுகிறது .
ஆனால் நானோ யூரியா 4 சததழைச் சத்து செறிவு உடையது . ஒரு ஏக்கருக்கு அரை லிட்டர் போதுமானது. விவசாயிகள் மேலுரமாக யூரியா இடுவதை தவிர்த்து அதற்கு பதிலாக நானோ யூரியாவை பயன்படுத்தலாம். ஏக்கருக்கு அரை லிட்டர் நானோயூரியா போதுமானது. இதனை 20 லிட்டர் நீரில் கலந்து கைத்தளிப்பானில் ஒரு டேங்கிற்கு ஒருலிட்டர் நானோ யூரியா கரைசல் மீதம் ஒன்பது லிட்டர் தண்ணீர் கலந்து கைத் தெளிப்பான் மூலம் இலைகள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். மாலை வேளையில் தெளிக்கலாம் மழைப் பொழிவு உள்ள நேரங்களில் நானோயூரியா தெளிப்பதை தவிர்க்கலாம்.
நானோயூரியா தெளித்த வயல்களில் ஏக்கருக்கு 300 முதல் 500 கிலோநெல் கூடுதலாக மகசூல் கிடைக்கிறது. இதன் மூலம் விவசாயிக்கு ஏக்கருக்கு 8000 வரை கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிக ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து வட்டாரங்களிலும் வட்டாரத்திற்கு 20 நானோ யூரியா தெளிப்பு செயல் விளக்கதளைகள் அமைத்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது
அதன் அடிப்படையில் இப்கோ நிறுவனத்தின் மூலம் இரண்டு மேலுரங்களுக்கு பதிலாக நானோயூரியா பயன்படுத்தும் வகையில் ஒவ்வொரு செயல் விளக்கத்துக்கும் இரண்டு அரை லிட்டர் நானோ யூரியா வழங்கப்படுகிறது. மதுக்கூர் வட்டாரத்தில் மதுக்கூர் வடக்கு கிராமத்தில், விவசாயி ராமமூர்த்தி வயலில் நானோ யூரியா செயல் விளக்கதளை அமைக்கப்பட்டது. விவசாயி தற்போது என் எல் ஆர் 34449 என்ற சன்னரகத்தில் இரண்டாம் மேலுரமாக நானோ யூரியா வினை மட்டும் தெளித்துள்ளார். இது பற்றி விவசாயி கூறுகையில் யூரியா உரத்தினை மேலுரமாக இடும்போதுநெல் பயிர் உடனடியாக பச்சைபிடித்து அதிக பூச்சிகளை ஈர்க்கிறது.
மேலும் விரைவில் தன் பச்சையையும் இழந்துவிடுகிறது. ஆனால் நானோயூரியாதெளித்தவயலில் அடுத்த 15 நாட்களுக்கு பசுமை மாறாமல் இருப்பதோடு யூரியா வீணாவதும் தடுக்கப்பட்டுள்ளது. மண்ணும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது என தெரிவித்தார். அத்துடன் மேல் உரமாக இடக்கூடிய, 50 சதவீதம் சாதாரண யூரியாவை தவிர்க்க முடியும். என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார் .
இந்த ஆய்வின் போது வேளாண் துணை இயக்குனர் பாலசரஸ்வதி, வேளாண்,உதவி இயக்குனர் திலகவதி, துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி, வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன், தினேஷ் மற்றும் பலர் உடன் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu