பயிர்காப்பீடு செய்ய கடைசி நாள் ஜூலை,31..! விவசாயிகளே உஷார்..!

பயிர்காப்பீடு செய்ய கடைசி நாள் ஜூலை,31..! விவசாயிகளே உஷார்..!

தற்போது குறுவை நடவு மேற்கொள்ளப்பட்டு வரும் ஒலயகுன்னம் கிராமத்தில் விவசாயிகளிடம் பயிர் காப்பீடு குறித்து துண்டு பிரசுரம் வழங்கி வேளாண் உதவி இயக்குனர் திலகவதி, வேளாண் உதவி அலுவலர் முருகேஷ்  மற்றும் அட்மா திட்ட சுகிர்தா ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

இயற்கை சீற்றங்களில் இருந்து தங்கள் வாழ்வாதாரங்களை காத்துக்கொள்ள பயிர்க்காப்பீடு செய்து பயன்பெறுமாறு வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுக்கூர் மற்றும் பட்டுக்கோட்டை வட்டார விவசாயிகள் குறுவை நெல் பயிர் காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாள் என்பதை அறிந்து விவசாயிகள் பயிர்காப்பீடு செய்ய வேளாண் உதவி இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிகழாண்டு சாரீஸ் குறுவை பருவ நெல்பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்காக தஞ்சாவூர் ஒன்று தொகுதிக்கு உட்பட்ட மதுக்கூர் மற்றும் பட்டுக்கோட்டை வட்டாரங்களுக்கு சீமா பொது காப்பீட்டு நிறுவனம் முதல் ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து காரிப் சிறப்பு பருவத்தில் நெல்பயிருக்கு பயிர் காப்பீடு தொகை ஏக்கருக்கு ரூபாய் 36,500 . விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியதொகை ரூபாய் 730. காப்பீடு செய்ய கடைசி தேதி ஜூலை 31 என உறுதி செய்யப்பட்டுள்ளது. கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று பசலி 14 34, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க ஜெராக்ஸ் நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ளலாம்.

குறுவை நெல் பயிருக்கும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் திடீர் பாதிப்புகள் மற்றும் மகசூல் குறைவு ஆகியவற்றை கருத்தில் கொண்டும் விவசாயிகளுடைய கோரிக்கைகளை ஏற்றும் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மூலம் நிகழ் ஆண்டில் குறுவை நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை இடர்பாடுகளான மழை மற்றும் அதிக வெப்பம் போன்றவைகள் தற்போது பயிரின் அறுவடை நேரங்களில் எதிர்பாராத பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டுள்ள காரிப் குறுவை பயிரினை காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெற கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி தன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் தகவல் அறிய தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story