'கிசான் சம்மான் நிதி யோஜனா' நிதி பெற இகேஒய்சி அவசியம் : வேளாண் உதவி இயக்குனர்

கிசான் சம்மான் நிதி யோஜனா நிதி பெற இகேஒய்சி அவசியம் : வேளாண் உதவி இயக்குனர்
X

இகேஒய்சி குறித்து விவசாயிகளுக்கு மதுக்கூர் வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் விளக்கி கூறினார்.

Electronic know your customer- 'கிசான் சம்மான்நிதி யோஜனா' நிதி பெறுவதற்கு இகேஒய்சி அவசியம் என்று மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளின் 12 வது தவணைத் தொகை எவ்வித தொய்வும் இன்றி பெற வேண்டும் என்றால் விவசாயிகள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு முகவரி சரிபார்ப்பு, விவசாய நிலம் உள்ளதற்கான ஆதாரம் போன்றவற்றை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இவைகளுடன் இகேஒய்சி-யை உறுதி செய்து கொள்வது மிக மிக அவசியம்.

ekYC...Electronic know your customer,.என்பதன் சுருக்கமே இகேஒய்சி என கூறப்படுகிறது. இதன்படி விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்களுடைய ஆதார் எண்ணை அவர்கள் பயன்படுத்தும் செல்பேசி எண்ணுடன் இணைத்து விவசாயிகள் அவர்களின் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி யை உள்ளீடு செய்யவேண்டும். பின்னர் பிஎம் கிசான் போர்டலில் விவரங்கள் சரியாக உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு இகேஒய்சி செய்யாத விவசாயிகளுக்கு அடுத்த தவணைத் தொகை வழங்க இயலாது. குறிப்பாக பி எம் கிசான் தொடங்கும்போது இருந்த முகவரிதான் தற்போதும் உள்ளதா என அறிந்து கொள்ளுங்கள். இல்லாவிடில் உங்களது ஆதார் விபரங்களை வங்கிக் கணக்கில் அப்டேட் செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் நிதியைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும். எனவே, இகேஒய்சி அப்டேட் செய்வதற்கு விவசாயிகள் தங்களுடைய வேளாண் உதவி அலுவலர்களை அணுகி ஆன்லைனில் சரி பார்த்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆஃப்லைனில் சரி செய்து கொள்ள பொது சேவை மையத்தை அணுகவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இரண்டு தினங்களுக்குள் அனைத்து விவசாயிகளும் தங்கள் ஆதார் விபரங்களை இகேஒய்சி செய்துகொண்டு தடங்கலின்றி நிதி உதவி பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன் தங்கள் வேளாண் உதவி அலுவலரையோ வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் இதற்கான பணிக்கப்பட்டுள்ள அட்மா மற்றும் சிசி பணியாளர்களை அணுக வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மதுக்கூர் வட்டார விவசாயிகளை கேட்டுக்கொள்கிறார்.

இதற்கான காலக்கெடு ஜூலை 31க்குள் முடிவடைந்து விட்டபடியால் வரும் திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களுக்குள் இ கே வைசியை முடித்துக் கொள்ள வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே இகேஒய்சி பணியை முடித்துவிட்ட விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....