ட்ரோன் மூலம் உளுந்து பயிருக்கு டீஏபி கரைசல் தெளிப்பு..!
ட்ரோன் மூலமாக உளுந்து பயிருக்கு டிஏபி கரைசல் தெளிக்கப்பட்டது.
மதுக்கூர் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து பயிருக்கு ட்ரோன் மூலமாக டிஏபி கரைசல் தெளிக்கப்பட்டது. இப்பகுதியில் உளுந்து பயிரானது தற்போது 30 முதல் 35 நாளில் பூக்கும் நிலையில் உள்ளது. பூக்கும் பருவத்தில் 15 நாள் இடைவெளியில் இருமுறை டிஏபி கரைசல் தெளிப்பதன் மூலம் உளுந்து அதிக காய் வைப்பதோடு கூடுதல் மகசூலும் கிடைக்கிறது.
இத்தொழில்நுட்பத்தை அதிக அளவில் விவசாயிகள் தெரிந்து கொள்ளும் பொருட்டு அட்மா திட்டத்தின் கீழ் ராமாம்பாள்புரம் தேர்வு செய்யப்பட்டு வேளாண் அலுவலர் இளங்கோ அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப அலுவலர் சுகிர்தா மற்றும் மதுக்கூர் வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் கலந்து கொண்டு பூக்கும் பருவத்தில் உள்ள உளுந்து பயிருக்கு ட்ரோன் மூலம் டிஏபி உரக்கரைசல் தெளிக்கப்பட்டது.
விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்யும் அனைத்து கிராமங்களிலும் இத்தகு ஒருங்கிணைந்த தொழில் நுட்பங்கள் மேற்கொள்வதன் மூலம் அதிக மகசூல் பெற இயலும். மேலும் அரசு இத்தகைய திட்டங்களுக்கு கிராம வாரியாக தேர்வு செய்து மானியத்தில் செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வேளாண் அலுவலர் இளங்கோ மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் பூமிநாதன் டி ஏ பி தெளிப்பதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுக்கூர் வேளாண் இணை இயக்குனர் திலகவதி தலைமையில் செய்யப்பட்டிருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu