மதுக்கூர் வட்டார அண்டமி கிராமத்தில் ட்ரோன் மூலமாக பயிர்கள் ஆய்வு..!

மதுக்கூர் வட்டார அண்டமி கிராமத்தில் ட்ரோன் மூலமாக பயிர்கள் ஆய்வு..!
X

ட்ரோன்  மூலமாக பயிர்களை ஆய்வு செய்த எம்எல்ஏ அண்ணாதுரை. 

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ட்ரோன்கள் மூலம் பசுந்தாளுர பயிர்களின் நிலையை ஆய்வு செய்தார்.

ட்ரோன்கள் தற்போது விவசாயத்திலும் விவசாயம் அல்லாத பணிகளிலும் பல்வேறு வகையில் பயன்படுத்தப்படும் நிலையில் புதிய முயற்சியாக அண்டமி கிராமத்தில் பசுந்தாளுர பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை ட்ரோன்கள் மூலம் அதிக பரப்பினை ஆய்வு செய்தார், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்.

மாண்புமிகு தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான நஞ்சில்லா உணவு உற்பத்தியை உறுதிப்படுத்திடும் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டாரத்தில் 14.5 டன் பசுந்தாள்உர விதைகள் விவசாயிகளுக்கு 50 சத மானியத்தில் வழங்கப்பட்டது. சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள் நெல் சாகுபடிக்கு முன்பாக தக்கை பூண்டு விதைகளை நெல் வயலில் விதைத்து 35 ஆம் நாள் அதனை மடக்கி டிராக்டர் மூலம் உழுவது வழக்கம்.


இதன் மூலம் மண்ணின் கரிம சத்து அதிகரிக்கிறது. தக்கை பூண்டு பயிரிலுள்ள வேர் முடிச்சுகள் மண்ணில் தேவையான அளவு தழைச்சத்தினை நிலை நிறுத்துவதால் யூரியா போன்ற ரசாயன உரங்கள் இடுவதை தவிர்த்திடலாம். இதனால் உர செலவும் குறையும். மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அதிகரிப்பதோடு பசுந்தாள் உர பயிர் மக்குவதால் உருவாகும் கரிம அமிலங்கள் மண்ணில் கரையாத நிலையில் உள்ள நுண்ணூட்ட சத்துகளையும் கரைத்து பயிர்களுக்கு கிட்டும் நிலைக்கு மாற்றுகிறது.

மண்ணின் கட்டமைப்பு மாறுவதோடு காற்றோட்டம் அதிகரிப்பதால் அடுத்த கட்ட பயிரானது அதிக வேர் வளர்ச்சியோடு தூர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இத்தகைய நன்மை தரும் தக்கை பூண்டு விதைகள் மதுக்கூர் வட்டாரத்தில் மதுக்கூர் மற்றும் கீழக்குறிச்சி வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

தற்போது அனைத்து இடங்களிலும் பசுந்தாளுர பயிர் 20 முதல் 35 நாள் பயிராக உள்ளது. வேளாண் இயக்குனர் அவர்களின் அறிவுரை படியும் தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுஜாதா அவர்களின் வழிகாட்டுதலின்படி பசுந்தாள் உர விதை விநியோகம் கள அளவில் பயிரின் வளர்ச்சி நிலையோடு ட்ரோன் மூலம் புகைப்படம் எடுத்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து ட்ரோன் மூலம் அண்டமி கிராமத்தில் பயிரிட்டுள்ள தக்கை பூண்டு பயிர்களை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் அண்டமி ஊராட்சி மன்ற தலைவர் முன்னோடி விவசாயிகள் அடங்கிய குழு மூலம் ஆய்வு செய்தார்.


அண்டமியில் 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் 20 நாள் முதல் மடக்கிவிடும் நிலை வரை பயிர்நிலை உள்ளது. அண்டமியில் விவசாயி துரை. மாணிக்கவாசகம் குப்புசாமி ஆகியோரின் வயலில் தக்கை பூண்டு பயிர்களை பிடுங்கி அதில் உள்ள அதிகமான வேர் முடிச்சுகளையும் ஆய்வு செய்தார்.

பின் அண்டமி கிராம விவசாயிகளிடம் மண் வளத்தை பெருக்கும் நுண்ணுயிர் களைஅதிகரிக்கும் உரச்செலவை குறைக்கும் தக்கை பூண்டு விதைகளை அனைத்து விவசாயிகளும் பயிரிட்டு பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன் ஜெரால்டு சுரேஷ் தினேஷ் ராமு மற்றும் முருகேஷ் செய்திருந்தனர்.அட்மாதிட்ட அலுவலர்கள் சுகிதா மற்றும் ராஜு

நிகழ்வினை ஒருங்கிணைத்தனர். வேளாண் உதவி இயக்குனர் திலகவதி நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!