பெண் குழந்தை உயிரிழந்த விவகாரம்: சின்ன பாட்டி, மந்திரவாதி உள்பட மூவர் கைது
ஆறு மாத பெண்குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், சின்ன பாட்டி, மந்திரவாதி உள்ளிட்ட மூன்று பேர் மீது இரண்டு பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர் நசுருதீன் - ஷாலிஹா தம்பதிகள். இவர்களுக்கு 6மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர். அப்போது தூக்கம் கலைந்த ஷாலிஹா கண்விழித்த போது தொட்டியில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை காணமல் திடுக்கிட்டு கத்தியுள்ளார்.அப்போது அவரது கணவர் மாமியார் அனைவரும் ஆறு மாத குழந்தையை தேடிய போது வீட்டின் பின்புறம் மீன் வைக்கும் பெட்டியில் நீரில் மூழ்கியவாறு இறந்துள்ளது. பின்னர் குடும்பத்தினர் மற்றும் ஜமாத்தார்கள் கலந்துபேசி மல்லிப்பட்டினம் பள்ளிவாசலில் குழந்தையின் உடலை அடக்கம் செய்து விட்டனர்.
இந்த தகவல் அப்பகுதி தலையாரி சுதாகருக்கு தெரியவர உடனடியாக அவர் கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்துவுக்கு தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம நிர்வாக அலுவலர் சேதுபாவாசத்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரணை தொடங்கினர். மேலும் அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் உடலை தாசில்தார் மற்றும் டிஎஸ்பி தலைமையில் தோண்டி எடுத்து மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்து மீண்டும் அங்கேயே அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் நஸ்சுரூதீன் சின்னம்மா ஷார்மிளா பேகத்தின் கணவர் அஸாருதீன் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கேரளாவை பூர்வீகமாக கொண்ட மந்திரவாதியான முகமது சலீம் என்பரை சந்தித்து குடும்ப கஷ்டங்களை கூறியுள்ளாத கூறப்படுகிறது. அதற்கு 21 கோழிகளை உயிர் பலி கொடுக்க வேண்டும், அப்போது சரிவரவில்லையென்றால் உங்கள் வீட்டில் ஒருவரின் உயிரை கொடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதனால் குழந்தையை சின்ன பாட்டி ஷர்மிளா பேகம் கொலை செய்துள்ளாதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சின்ன பாட்டி ஷர்மிளாபேகம், அவரது கணவர் அசாருதீன், மாந்தீரகவாதி முகமது சலீம் ஆகிய மூன்று பேர் மீது இரண்டு பிரிவின் கீழ் சேதுபாவசத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu