தஞ்சை மருததுவமனையில் கொரோனாவால் இறந்தவரின் உடல் மாயம்

தஞ்சை மருததுவமனையில் கொரோனாவால் இறந்தவரின் உடல் மாயம்
X
தஞ்சை மருததுவமனையில் கொரோனாவால் இறந்தவரின் உடல் மாயமானது உடலை நான்கு நாட்களாக மனைவி மற்றும் குழந்தைகள். தேடிவருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். ஆசாரியான இவருக்கு திருமணம் ஆகி சங்கீதா என்ற மனைவியும், ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 5ஆம் தேதி சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மறுநாளே, அதாவது கடந்த 6ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த பாலகிருஷ்ணனின் உடலை பக்குவப்படுத்தி அவரது உறவினர்களிடம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.

அமரர் ஊர்தி மூலம் சொந்த ஊருக்கு உடலை எடுத்து சென்று அங்கு அடக்கம் செய்வதற்கான அனைத்து பணிகளையும் உறவினர்கள் மேற்கொண்டுள்ளனர், அப்போது உறவினர்கள், இறந்த பாலகிருஷ்ணனின் உடலை பார்க்க வேண்டும் என கூறியதால் அவர் முகத்தைப் பார்த்தபோது அங்கு 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடலை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக உடலை எடுத்துக் கொண்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு திரும்பியுள்ளனர். அங்கு மருத்துவ கல்லூரி நிர்வாகத்திடம் மாறி கொடுத்த உடலை ஒப்படைத்துவிட்டு இறந்த பாலகிருஷ்ணனின் உடலை கேட்டுள்ளனர்.

ஆனால் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் தவறு நடந்து விட்டதாகவும், இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் தங்களுடைய கணவரின் உடலை மீண்டும் தருவதாகவும் உறுதி அளித்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி உள்ளனர்.

ஆனால் பாலகிருஷ்ணன் இறந்து நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை மருத்துவமனை நிர்வாகத்திடம் எந்த தகவலும் வரவில்லை என்றும்! மேலும் கொரோனா சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்த தனது கணவரின் உடலை தொலைத்துவிட்டு நிர்க்கதியாக நிற்பதாகவும் அவரது மனைவி சங்கீதா வேதனையுடன் தெரிவிக்கிறார். என் கணவனின் உடலை கொடுங்கள் இல்லை அவரின் உடலை எரித்த சாம்பலையாவது கொடுங்கள் என கண்ணீர் சிந்திவருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!