கிராம சபை கூட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்தில் உளுந்து விதை..!

கிராம சபை கூட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்தில் உளுந்து விதை..!
X

மன்னங்காடு கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி தலைவர் மானிய விலையில் விவசாயிகளுக்கு உளுந்து விதை வழங்கினார். அருகில் மதுக்கூர் வேளாண்மை துணை இயக்குனர் திலகவதி.

மன்னாங்காடு பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு கிராம சபை கூட்டத்தில் மானியத்தில் உளுந்து விதையினை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்.

காந்தி ஜெயந்தியையொட்டி இன்று தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.அந்த வகையில் தஞ்சை மாவட்டம்,மதுக்கூர் வட்டாரத்தில் மன்னங்காடு கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் நடந்தது.

மதுக்கூர் வட்டாரத்தில் இன்று மன்னாங்காடு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் கலந்து கொண்டுவிவசாயத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினர்.


வேளாண் உதவி அலுவலர் ஜெரால்டு விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் தெளிப்பு நீர் பாசன கருவிகள் மற்றும் சொட்டு நீர் பாசன கருவிகள் வழங்கப்படுவது குறித்து விளக்கி கூறினார். பின் மன்னாங்காடு ஊராட்சி மன்ற தலைவர் வைத்திலிங்கம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பரப்பில் விழுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் சான்று விதை விநியோக திட்டத்தின் கீழ் உளுந்து தேவைப்படும் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூபாய் 50 மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கினார்.


விதை ஆய்வாளர் நவீன் சேவியர் தரமான விதைகள் அதிகமான விளைச்சலுக்கு அடித்தளம் என்பதை விளக்கி கூறினார். இன்றைய தினம் 580 கிலோ உளுந்து வம்பன்8 சான்று விதைகள் 42 விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்து வழங்கப்பட்டது.

சிரமேல்குடி கிடங்கு மேலாளர் முருக லட்சுமி மானிய திட்டங்களின் கீழ் பதிவு செய்தார். சிசி அலுவலர்கள் ரம்யா மற்றும் வைஷ்ணவி விநியோக பணியினை ஒருங்கிணைத்தனர். துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags

Next Story