மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் துணை இயக்குனர் திடீர் ஆய்வு..!

மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் துணை இயக்குனர் திடீர் ஆய்வு..!
X

வேளாண் துணை இயக்குனர் கலாதேவி மதுக்கூர் வட்டாரத்தில் திட்ட பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வேளாண் துணை இயக்குனர் கலாதேவி மதுக்கூர் வட்டாரத்தில் மண்ணுயிர் காத்து மன்னுயிர்காப்போம். திட்ட பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மதுக்கூர் வட்டாரத்தில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பசுந்தாள் உர விதைகள் விநியோகம் மற்றும் வயலில் விதைப்பு மேற்கொண்டுள்ள பணி ஆகியவற்றின் செயல்பாடுகளை திடீர் ஆய்வு மேற்கொள்வதற்காக மதுக்கூர் வட்டாரத்துக்கு உட்பட்ட மதுக்கூர் வடக்கு கிராமத்திற்கு வேளாண் துணை இயக்குனர் வருகைதந்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் அப்பகுதியில் 10 ஏக்கருக்கு பசுந்தாள் உரவிதை வழங்கப்பட்டு விதைக்கப்பட்டதை பார்வையிட்டார். மதுக்கூர் வடக்கு கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி சுந்தரமூர்த்தி உட்பட்ட 10 விவசாயிகள் பசுந்தாள் உர விதைகளை விதைத்து பத்து நாள் ஆனது குறித்து அறிந்துகொண்டதுடன் பயிர் பராமரிப்பு குறித்தும் ஆய்வு செய்தார்.


அப்போது விவசாயிகளிடம் பசுந்தாள் உரவிதைகள் வளர்ச்சிக்கு தேவையான நீர் ஏற்பாடு பற்றி கேட்டு அறிந்தார். மேலும் பயிரின் வளர்ச்சி நிலைகளில் ட்ரோன் மூலம் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தி போர்டலில் பதிவேற்றம் செய்திட கேட்டுக்கொண்டார்.

தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் சுஜாதா வட்டாரத்தில் வரப்பெற்ற பசுந்தாள் உர விதையளவு மற்றும் விநியோகம் போன்றவை குறித்து கேட்டறிந்து வேளாண் உதவி அலுவலர்கள் மூன்று தினங்களுக்குள் விநியோகப் பணியினை முடித்திட அறிவுறுத்தினார்.

பின்னர் அத்திவெட்டி கிராமத்தில் தென்னை இயற்கை விவசாயிகள் குழு உறுப்பினர்களின் இயற்கை விவசாய இடுபொருள் உற்பத்தி பணியினை ராஜம் கிருஷ்ணன் வயலில் ஆய்வு செய்து பின் குழு உறுப்பினர்களுடன் இயற்கை விவசாயத்திற்கும் ரசாயன உரம் பயன்பாட்டிற்கும் உள்ள வரவு செலவினங்களை கேட்டறிந்தார்.

இயற்கை விவசாயம் செய்யும் அனைவருக்கும் இயற்கை இடுபொருள்களை விற்று அதன் கணக்கு விபரங்களை வங்கியில் தொடர்வதன் மூலம் இயற்கை விவசாயத்துக்கான வளர்ச்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என எடுத்து கூறினார்.


அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் இயற்கை விவசாய சான்றிதழான ஸ்கோப் சான்றிதழை வேளாண் இயக்குனர் அலுவலக வேளாண் துணை இயக்குனர் கலாதேவி மற்றும் தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுஜாதா ஆகியோர் வழங்கினர். வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மற்றும் விதை சான்றளிப்பு துறை வேளாண் அலுவலர் சங்கீதா அத்திவெட்டி இயற்கை விவசாய இடுபொருள் மையம் பற்றி விளக்கி கூறினர்.

வேளாண் அலுவலர் இளங்கோ குழுவின் செயல்பாடுகள் பற்றி விளக்கி கூறினார் ‌ வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் குழு பதிவேடுகள் பராமரிக்கப்படுவதை ஆய்வுக்கு காண்பித்தார். வேளாண் உதவி அலுவலர் தினேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

அத்திவெட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் மற்றும் அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழு தலைவர் வைரவ மூர்த்தி, பொருளாளர் வடிவேல் மூர்த்தி மற்றும் செயலாளர் பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டனர்.


மேலும் முன்னோடி விவசாயிகள் ராஜம் கிருஷ்ணன், மணி, முத்து, ஹிட்லர் ராமமூர்த்தி, குமார் மற்றும் தங்க குமரவேலு உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டு அரசின் மூலம் இயற்கை விவசாயம் செய்யும் குழு உறுப்பினர்களுக்கு நாட்டு மாடு ஒன்று கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அத்திவெட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் இயற்கை விவசாயிகள் குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்