பட்டுக்கோட்டையில் 8 கடைகள் சீல் வைப்பு - 3,800 அபராதம்

பட்டுக்கோட்டையில் 8 கடைகள் சீல் வைப்பு - 3,800 அபராதம்
X
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக 8 கடைகளை சீல் வைத்து மூடினர், 3800ஐ அபராதமாக விதித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று பெருகிவருகிறது . இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு விதிமுறைகளை வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் விதித்துள்ளது.

அத்தியாவசிய கடைகள் மட்டுமே பகல் 12 மணி வரை இயக்க வேண்டும் என்று அரசின் வழிகாட்டு நெறிமுறை பின்பற்றப்படுகிறது .சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்பதை வணிகர்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

இதனிடையே தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் பகுதிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத 8 கடைகளுக்கு சீல் வைத்து, ரூபாய் 3800 அபராதத் தொகையாக விதிக்கப்பட்டது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்