தொடரும் கனமழை-ஒரே ஊரில் 4 வீடுகள் இடிந்து சேதம்

தொடரும் கனமழை-ஒரே ஊரில் 4 வீடுகள் இடிந்து சேதம்
X

பேராவூரணி பகுதியில் தொடரும் கனமழையால் ஒரே ஊரில் 4 வீடுகள் இடிந்து சேதமானது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் கடந்த ஐந்து தினங்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே ஏரி, குளங்கள் தண்ணீர் நிரம்பி வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் வீட்டின் சுவர்கள் பலமிழந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் பேராவூரணி அருகிலுள்ள மணக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பாங்கரான்கொல்லை கிராமத்தில் விவசாயக் கூலி தொழிலாளர்கள் நான்கு பேரின் வீடுகள் அடுத்தடுத்து கனமழையால் இடிந்து சேதம் ஆனது. மேலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இப்பகுதியில் உள்ள ஏராளமான குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் குடியிருப்போர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!