தில்லி போராட்டம்: ஆதரவளித்து தி்ரும்பிய விவசாயிகளுக்கு ரயில்நிலையத்தில் வரவேற்பு

தில்லி போராட்டம்: ஆதரவளித்து தி்ரும்பிய விவசாயிகளுக்கு ரயில்நிலையத்தில் வரவேற்பு
X

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு திரும்பி வந்த விவசாயிகளுக்கு பாபநாசம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சாமுதர்மராஜன், ராஜமாணிக்கம், திருநாவுக்கரசு, விவசாயிகள் தில்லியிலிருந்து வந்தனர்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு திரும்பி வந்த விவசாயிகளுக்கு பாபநாசம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

தில்லியில் தொடர்ந்து வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து, பிரதமர் மோடி அரசுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பாபநாசத்தில் இருந்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் சாமுதர்மராஜன் தலைமையில், ஒன்றிய தலைவர் ராஜமாணிக்கம், நிர்வாக குழு உறுப்பினர் திருநாவுக்கரசு மற்றும் திரளான விவசாயிகள் கடந்த ஒரு வார காலம் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர், தில்லியில் இருந்து புறப்பட்ட போராட்டக் குழுவினர் பாபநாசம் ரயில் நிலையம் வந்தடைந்தனர். அனைவரையும் ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் தில்லைவனம், அம்மாபேட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், தொழிற்சங்க நிர்வாகிகள் செல்வராஜ், ஜோதி, ராமன், விவசாய சங்க பிரதிநிதி பொய்யாமொழி, ரயில்கள் சங்க செயற்குழு உறுப்பினர் கனகசபை மற்றும் விவசாயிகள் உற்சாக வரவேற்பளித்தனர்.இதில் பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future