தஞ்சாவூரில் கடன் தவணைகளை செலுத்த முடியாமல், நுண் கடன் முகவர்களிடம் கெஞ்சும் ஏழை பெண்கள்

தஞ்சாவூரில் கடன் தவணைகளை செலுத்த முடியாமல்,  நுண் கடன் முகவர்களிடம் கெஞ்சும் ஏழை பெண்கள்
X

தஞ்சை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், நுண்கடன் முகவர்களிடம் கடன் தவணை கட்ட முடியாமல், காலஅவகாசம்  கேட்கும் அவலை நிலை,

தஞ்சாவூரில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தவணைக் கட்ட முடியாமல் நுண் கடன் முகவர்களிடம் கெஞ்சும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவல் இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருவதையடுத்து, மாநில அரசு பல்வேறு தளர்களுடன் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால் அன்றாடம் வேலைக்கு செல்பவர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என அடித்தட்டு மக்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை எளிய விவசாய தொழிலாளர்கள் மிகப்பெரிய வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர், வேலை இல்லாததால் ஒரு வேளை உணவிற்கு கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர், அம்மாப்பேட்டை, செங்கிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மக்களுக்கு சுயஉதவி குழு மூலம் 10க்கும் மேற்பட்ட தனியார் நுண் கடன் நிறுவனங்கள், கடன்கள் வழங்கியுள்ளது.

அந்த கடன் தொகைகளை திருப்பி செலுத்துமாறு வற்புறுத்தியும், மிரட்டி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்ட்டுகின்றனர்.

அம்மாப்பேட்டை பகுதியில் கடன் தொகை செய்ய வந்த ஊழியர்களிடம் வேலை எதுவும் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் வேண்டும் என முகவர்களிடன் கெஞ்சும் வீடியோ வெளியாகியுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், கடந்த மூன்று மாதத்திற்கு மேல் வேலை இல்லாமல் இருந்து வருவதாகவும், ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படும் வேளையில் நுண் கடன் முகவர் தொடர்ந்து தவனைகளை செலுத்த வற்புறுத்தி வருவதாகவும், காலதாமதம் ஏற்படுவதால் கூடுதல் வட்டி கேட்பதாகவும் கூறும் தொழிலாளர்,

தமிழக அரசு வழங்கிய 2,000 நிவாரண தொகையும் நுண் கடன் முகவர்கள் வாங்கி கொண்டனர். மேலும் அடுத்த நிவாரணம் தொகையும் தங்களிடம் கொடுத்துவிட வேண்டும் என அவர்கள் மிரட்டுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே மீண்டும் எங்களுக்கு நிரந்தர வருமானம் வரும் வரை தவணை செலுத்தவதற்கு வட்டியில்லாத கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!