முன்னாள் முதல்வர் கருணாநிதி பேனர் கிழிப்பு; பாபநாசத்தில் பரபரப்பு

முன்னாள் முதல்வர் கருணாநிதி பேனர் கிழிப்பு; பாபநாசத்தில் பரபரப்பு
X

மர்ம நபர்களால் கிழிக்கப்பட்ட பேனர்.

பாபநாசத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிளக்ஸ் பேனர் கிழிப்பால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே பண்டாரவடை கிராமத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் திமுக பிரமுகரான, இவர் தஞ்சை - கும்பகோணம் மெயின் ரோடு, பாபநாசம் அரசு மருத்துவமனை மதில் சுவற்றின் ஓரம், தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பிளக்ஸ் பேனர் வைத்திருந்தார்.

இந்நிலையில், பிளக்ஸ் பேனரை மர்ம நபர்கள் கிழித்துள்ளதாக நவநீதகிருஷ்ணனுக்கு தகவல் வந்தது. இதுகுறித்து பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

போலீசார் விசாரணையில், நவநீதகிருஷ்ணன் பிளக்ஸ் வைத்தது அப்பகுதியில் உள்ள நிர்வாகிகளுக்கு பிடிக்காததால், திமுகவினர் பேனரை கிழித்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது. திமுக பிளக்ஸ் பேனர் கிழித்ததால் பாபநாசம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!