ரேஷன் கடையில் தரமற்ற பொருட்கள் வழங்கல்; பொதுமக்கள் சாலை மறியல்

ரேஷன் கடையில் தரமற்ற பொருட்கள் வழங்கல்; பொதுமக்கள் சாலை மறியல்
X

திருவையாத்தங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருவையாத்தங்குடியில் ரேஷன் கடையில் தரமற்ற பொருட்கள் வழங்கியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவையாத்தங்குடியில் சுமார் 500க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இங்குள்ள ரேஷன் கடையில் மக்களுக்கு வழங்கும் ரேஷன் பொருட்கள் தரமற்றதாகவும், ரேஷன் கார்டுக்குரிய பொருட்களை வழங்காமல் அலைகழித்தனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் பலன் இல்லாத நிலையில் இன்று மதியம் பாபநாசம் திருக்கருகாவூர் சாலை திருவையாத்தங்குடி கிராம சாலையில் அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த அரசு அதிகாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய பொருட்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்திரவாதம் அளித்ததின் பேரில் மறியல் போராட்டம் வாபஸ் பெற்றது.

இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்