மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல் கொத்தனார் பலி மகன் உள்பட 2 பேர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல் கொத்தனார் பலி மகன் உள்பட 2 பேர் படுகாயம்
X
பாபநாசத்தில் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல் கொத்தனார் பலி மகன் உள்பட 2 பேர் படுகாயம்

பாபநாசம் அருகே ராஜகிரி எம்ஜிஆர் நகரில் வசித்து வந்தவர் முருகானந்தம் (வயது 35)கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருடைய மகன் ஹரிஹரன் (வயது 11). நேற்று மாலை இருவரும் மோட்டார் சைக்கிளில் கபிஸ்தலம் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது பாபநாசம் படுகை புதுத்தெரு மெயின் ரோட்டில் வரும்போது எதிரே மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த அஜித் குமார் (வயது 29)என்பவர் நேருக்கு நேர் மோதி விட்டார். இதில் சம்பவ இடத்திலேயே முருகானந்தம் இறந்துவிட்டார்.

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த இவருடைய மகன் ஹரிஹரனும், மோட்டார் சைக்கிளை மோதிய ஒன்பத்திவேலி அஜீத்குமார் ஆகிய இருவரும் பலத்த படுகாயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள்,சப்-இன்ஸ்பெக்டர் செல்வராணி,சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை விபத்தில் இறந்த முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!