முன்னாள் காங்கிரஸ் எம்.பி உயிரிழப்பு

முன்னாள் காங்கிரஸ் எம்.பி உயிரிழப்பு
X
தஞ்சாவூர் முன்னாள் காங்கிரஸ் எம்.பி துளசியய்யா வாண்டையார் வயது மூப்பு காரணமாக காலமானார்.

சுதந்திர போராட்ட வீரர், காங்கிரஸ் மூத்த தலைவர், முன்னாள் எம்.பி, தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி புஷ்பம் கல்லூரி தாளாளர் துளிசியய்யா வாண்டையார் (95) உடல் நலக்குறைவால் சென்னை சாலிகிராமத்தில் இன்று அதிகாலை காலமானார்.

இறுதி மரியாதைக்காக உடல் தஞ்சை கொண்டு வரப்படுகிறது. சுமார் 50 ஆண்டுகளாக பூண்டி புஷ்பம் கல்லூரியின் தாளாளராக உள்ளார். டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முதல் பட்டதாரிகளை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர். கல்வித் தந்தை, கல்வி வள்ளல் என்று போற்றப்படுபவர்.

மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராசர், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஆகியோருடன் நெருங்கிய பழக்கமுடைய இவர் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் காங்கிரஸ் தலைவராக இருந்தவர்.

அம்மாபேட்டை ஒன்றியக் குழுத் தலைவர் பதவியை வகித்த இவர் 1991 - 1996 ஆம் ஆண்டுகளில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்தார்.

Tags

Next Story
ai solutions for small business