நெல்குவியலை பன்றிகளிடமிருந்து பாதுகாக்க மழையில் விடியவிடிய போராடும் விவசாயிகள்

நெல்குவியலை பன்றிகளிடமிருந்து  பாதுகாக்க  மழையில் விடியவிடிய போராடும் விவசாயிகள்
X

தஞ்சை மாவட்டம்  மாரியம்மன் கோயில் முதல் அம்மாப்பேட்டை வரை சுமார் ஏழு கிலோமீட்டர் வரை நெல் மணிகள் சாலைகளில் கொட்டிக் வைக்கப்பட்டுள்ளன.

. மாரியம்மன் கோயில் முதல் அம்மாப்பேட்டை வரை சுமார் ஏழு கிலோமீட்டர் வரை நெல் மணிகள் சாலைகளில் கொட்டிக் வைக்கப்பட்டுள்ளன.

அறுவடை செய்த நெல்மணிகளை கொட்டி வைக்க களம் இல்லாததால், குப்பை கொட்டும் இடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் குவியலை பன்றிகள் சேதப்படுத்தாமல் இருக்க கொட்டும் மழையில் விடிய விடிய விவசாயிகள் கண்விழித்து பன்றிகளை விரட்டி வரும் அவல நிலை தொடர்கிறது.

தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை ஓரங்களில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நெல் குவியல்கள் தேக்கம் அடைந்துள்ளது. அறுவடை பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், சாலைகளிலும் இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாரியம்மன் கோயில் முதல் அம்மாப்பேட்டை வரை சுமார் ஏழு கிலோமீட்டர் வரை நெல் மணிகள் சாலைகளில் கொட்டிக் வைக்கப்பட்டுள்ளன.

மாரியம்மன் கோவில், பூண்டி, ஒரத்தநாடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் சாலை ஓரங்களில் இன்னும் நெல் குவியல்கள் அப்படியே உள்ளது. மாரியம்மன் கோவில் பகுதியில் சாலையோரத்தில் நெல்லை கொட்ட கூடாது என கூறியதால் அப்பகுதி விவசாயிகள் அங்குள்ள ஊராட்சிமன்ற குப்பை கொட்டும் இடத்தில் நெல்லை கொட்டி காத்திருக்கின்றனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் தார்ப்பாய் கொண்டு நெல்லை மூடி பாதுகாத்தாலும், குப்பைகளில் சுற்றித்திரியும் பன்றி கூட்டங்கள் நெல் குவியலுக்குள் புகுந்து தார்ப்பாய்களை, கிழித்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் உள்ள விவசாயிகள், இரவு முழுவதும் கொட்டும் மழையிலும் நெல் கொட்டி வைக்கப்பட்டுள்ள தார்பாயின் உள்ளேயே படுத்து விடிய விடிய நெல்லை பாதுகாத்து வருகின்றனர். இருந்தபோதிலும் பன்றிகளில் அட்டகாசத்தால் தார்பாய்கள் கிழிந்து சேதமாகி வருகிறது எனவே தமிழக அரசு உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என வேதனை வேதனையோடு கூறுகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!