பாபநாசத்தில் 100 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை : எம்எல்ஏ வழங்கல்

பாபநாசத்தில் 100 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை : எம்எல்ஏ வழங்கல்
X
பாபநாசத்தில் நடந்த நிகழ்வில் எம்எல்ஏ-ஜவாஹிருல்லா பங்கேற்று பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்

பாபநாசத்தில் பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற மின்னணு புதிய குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்கு திமுக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமை வகித்தார் . பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் ரகுராமன் வரவேற்றார்.

ஒன்றிய குழு தலைவர்கள் சுமதிகலைச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் தாமரைச்செல்வன், தியாகசுரேஷ், குமார்,நாசர், பேரூர் செயலாளர் கபிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா பங்கேற்று பொதுமக்கள் 100 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையை வழங்கினார்.

நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காந்திமதி, ரமேஷ்பாபு மற்றும் வருவாய்துறை, ஊரக வளர்ச்சித் துறையினர் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!