கொரோனா: பொதுமக்கள் முகக்கவசம் அணிய தஞ்சை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டுமென தஞ்சை மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.
கொரோனா விழிப்புணர்வு வாரத்தின் 3-ஆவது நாளான திங்கள்கிழமை தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, அய்யம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பங்கேற்று, வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் கேடயமாக முகக்கவசத்தை (மாஸ்க்) அணிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அய்யம்பேட்டை கடை வீதி முழுவதும் விழிப்புணர்வு துண்டறிக் கைகளை வழங்கினார்.
பின்னர், வணிகர்களிடம், அனைவரும் கட்டாயம் முகக்கவசம்(மாஸ்க்) அணிந்து கொள்ள வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களையும் முகக்கவசம் (மாஸ்க்) அணிந்து வரச்செய்ய வேண்டும்.மாஸ்க் அணியாமல் யார் வந்தாலும் பொருட்களை வழங்கக்கூடாது. பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் வெளியில் சுற்றித்திரிந்த பின்னர் வீட்டுக்குச் சென்றால், அங்குள்ள பெற்றோருக்கும், முதியவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டு, பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். எனவே, அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது: பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டையில் இன்று கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால் லாக்டவுன் என்பது சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று சற்று குறைந்துள்ளது. தற்போது வரை நிலைமை கட்டுக்குள் இருந்து வருவதாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu