பாபநாசத்தில் குத்தகை சாகுபடி உழவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

பாபநாசத்தில் குத்தகை சாகுபடி உழவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
X

கும்பகோணத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் விமலநாதன் தலைமையில் நடைபெற்றது

கொரோனா காலத்தில் இருப்பதால் தமிழக அரசு விவசாயிகளுடைய குத்தகை பாக்கி தள்ளுபடி செய்ய வேண்டும்

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் குத்தகை சாகுபடி செய்கின்ற உழவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் விமலநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், குத்தகை சாகுபடி செய்கின்ற உழவர்களுக்கு, பல்வேறு விதமான பிரச்சினைகள் இருக்கிறது. குத்தகை செய்கின்ற விவசாயிகளுக்கு கணினி சிட்டா கிடைப்பதில்லை, இதேபோன்று பயிர் காப்பீடு செய்வதற்கு கணினி சிட்டா கிடைக்காததால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது.

புதிதாக விவசாயிகள் மின் இணைப்பு பெறுவதில் குத்தகை சாகுபடி செய்கின்ற விவசாயிகளுக்கு பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது. கொரோனா காலத்தில் இருப்பதால் தமிழக அரசு விவசாயிகளுடைய குத்தகை பாக்கி தள்ளுபடி செய்ய வேண்டும். புதிய மின் இணைப்பு பெற விவசாயிகளுக்கு முன்னுரிமை தரவேண்டும், பயிர் காப்பீடு செய்கின்ற குத்தகை சாகுபடியர்களுக்கு தாமதமில்லாமல் உடனடியாக சான்றிதழ் வேண்டும். அதுமட்டுமில்லாமல், அவர்களுக்கு புதிய பயிர்க் கடன்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story