லாரியில் கடத்திய 350 மூட்டை ரேஷன்அரிசி பறிமுதல்

லாரியில் கடத்திய 350 மூட்டை ரேஷன்அரிசி பறிமுதல்
X

கும்பகோணம் அருகே லாரியில் கடத்தப்பட்ட 350 மூட்டை ரேஷன்அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து கோயமுத்தூர் மாவட்டத்துக்கு லாரியில் ரேஷன்அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தஞ்சாவூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சங்கீதா உள்ளிட்டோர் கபிஸ்தலம் - சுவாமிமலை சாலையில் வாகன சோதனை நடத்தினர்.அப்போது அவ்வழியே வந்த லாரியில் 50 கிலோ வீதம் மொத்தம் 350 மூட்டைகள் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. மொத்தம் 17.50 டன் எடை கொண்ட இந்த அரிசியின் மதிப்பு ரூ.1.06 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கும்பகோணத்தில் உள்ள ஆலையில் அரவை செய்து கோயமுத்தூர் மாவட்டம், பல்லடத்துக்குக் கோழி தீவனத்துக்காகக் கடத்திச் செல்லப்படுவது தெரிய வந்தது. இது குறித்து கும்பகோணம் சோலையப்பன் தெருவைச் சேர்ந்த லிங்கதுரை (45), மயிலாடுதுறை மாவட்டம் திருவாலங்காடைச் சேர்ந்த சுந்தர் (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா