தஞ்சை மாவட்டத்தில் 3 இடங்களில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற பல்நோக்கு மருத்துவ முகாம்
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், வெண்டையம்பட்டி ஊராட்சி இராயமுண்டான்பட்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.
முகாமை, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரைசந்திரசேகரன் முன்னிலையில் மாவட்ட ஆட்சிய ர் தீபக் ஜேக்கப் தொடக்கி வைத்தார்.
பின்னர் மாவட்டஆட்சியர் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள யொட்டி தஞ்சாவூர் சுகாதார மாவட்டம், பூதலூர் தாலுக்கா, வெண்டையாம்பட்டி ஊராட்சியில் ராயமுன்டான் பட்டி அரசு நடுநிலைப் பள்ளி, கும்பகோணம் தாலுக்கா, திப்பிராஜபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் பட்டுக்கோட்டை தாலுக்கா, அதிராம்பட்டினம் துர்கா செல்லியம்மன் திருமண மண்டபம் ஆகிய மூன்று இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்து வமுகாம்கள் நடைபெற்றது.
இம்முகாமில், தஞ்சாவூர் சுகாதார மாவட்டம் பூதலூர் தாலுக்கா வெண்டையாம்பட்டி ஊராட்சியில் நடுநிலைப் பள்ளியில் 1513, ராயமுன்டான்பட்டி அரசுகும்பகோணம் தாலுக்கா திப்பிராஜபுரம் அரசுஉயர்நிலைப் பள்ளியில் 1585மற்றும் பட்டுக்கோட்டை தாலுக்கா, அதிராம்பட்டினம் துரகாசெல்லியம்மன் திருமண மண்டபத்தில் 1710 என மொத்தம் 4808 பேர் இம்மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயன் பெற்றா ர்கள்.
பொதுவான உடல் பரிசோதனை, பல், காது, மூக்கு, தொண்டை, கண், குழந்தைகள் நலம், பெண்கள் நலம், மகப்பேறு, பொது மருத்துவம், சித்த மருத்துவம் காசநோய் மற்றும் தொழு நோய் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இம்முகாமில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆர் பாலாஜி நாதன்,மருத்துவக் கண்காணிப்பாளர் ச.இராமசாமி, மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் பா.கலைவாணி, மாவட்ட திட்ட அலுவலர் விஜய் ஆனந்த் (முதலமைச்சர் விரிவான மருத்துவகாப்பீடு திட்டம்) மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசுமருத்து வமனை, தனியார் மருத்துவமனை,சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu