மதுக்கூர் வட்டார 25 விவசாயிகளுக்கு நெல் வயல் வெளிப்பள்ளி பயிற்சி

மதுக்கூர் வட்டார 25 விவசாயிகளுக்கு நெல் வயல் வெளிப்பள்ளி பயிற்சி
X

கீழ குறிச்சி கிராமத்தில் விவசாயிகளுக்கு நெல் வயல் வெளிப்பள்ளி பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டார கீழ குறிச்சி கிராமத்தில் விவசாயிகளுக்கு நெல் வயல் வெளிப்பள்ளி பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டார கீழ குறிச்சி கிராமத்தில் விவசாயிகளுக்கு நெல் வயல் வெளிப்பள்ளி பயிற்சி அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ், கீழக்குறிச்சி கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட 25 விவசாயிகளுக்கு நெல் வயல் வெளிப்பள்ளி பயிற்சி நடைபெற்றது. இப் பயிற்சி 6 வாரங்கள் நடைபெற்றது. ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நாளில் நெல் விதை தொடங்கி அறுவடை முடிய விவசாயிகள் மிக எளிய முறையில் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளும் வகையில் களத்திலே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நடைபெற்ற இரண்டாவது பயிற்சியில் நெல் விதை தேர்வு உயிர் உரங்களின் முக்கியதுவம் களை கட்டுப்பாடு மண்ணின் தன்மைக்கு ஏற்ற ரகத் தேர்வு பருவத்துக்கு ஏற்ற ரகத் தேர்வு நுகர்வோர் விருப்பத்தின் அடிப்படையில் அதிக இலாபம் தரும் வகையிலான சன்ன ரக நெல் உற்பத்தி போன்றவை பற்றி எடுத்துக் கூறப்பட்டது. கடனுடன் கூடிய அதிக உற்பத்தியை காட்டிலும் தற்சார்பு முறையில் லாபமான நெல் சாகுபடிக்கு ஒரு விவசாயி தன்னையும் தன் சுற்றுச்சூழலையும் கால்நடைகளையும் இயற்கையாக கிடைக்கும் இலைகளை உரங்களை பயன்படுத்தி மேம்பட்ட இயற்கை உரங்களை நாமே எவ்வாறு உற்பத்தி செய்து கொள்ள முடியும், பசு மாட்டின் சாணம் மற்றும் கோமியம் தண்ணீரை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்து நோயற்ற தரமான நாற்றுகளை உற்பத்தி செய்வது சூடோமோனஸ் மூலம் விதை நேர்த்தி செய்வது போன்றவை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

நேரடியாக விவசாயிகள் ஐந்து பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு, வயலில் இறங்கி வயலின் சூழல், வயலில் இருக்கும் பூச்சிகள், பூச்சிகளினால் பயிரில் ஏற்பட்டுள்ள தாக்கம் போன்றவை பற்றி நேரடியாக வேளாண் உதவி இயக்குனர் திலகவதி துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் முருகேஷ் ஆகியோர் மூலம் விளக்கி கூறப்பட்டது. இன்றைய தினம் வயலில் ஆனைகொம்பனின் தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல் இருப்பது விவசாயிகளுக்கு விளக்கப்பட்டு காலத்தே கட்டுப்படுத்திட அறிவுறுத்தப்பட்டது.

இந்த நெல் வயல் வெளிப்பள்ளி பயிற்சிக்கான ஏற்பாடுகளை அசோகன் கரிகாலன் பன்னீர்செல்வம் உட்பட்ட முன்னோடி விவசாயிகள் செய்திருந்தனர். பயிற்சியில் ஆர்வத்துடன் விவசாயிகள் கலந்து கொண்டு பயிர் மேலாண்மை குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பி விளக்கங்களை பெற்றனர். வேளாண் உதவி இயக்குனர் உழவர் வயல்வெளி பள்ளி விவசாயிகள் சக விவசாயிகளுடன் தற்சார்பு விவசாயத்துக்கான கருத்துக்களை பகிர்ந்து கொண்டு செலவை குறைத்து அதிக லாபம் பெற கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!