சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய பெண் செவிலியர்களுக்கான வேலை வாய்ப்பு

சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய பெண் செவிலியர்களுக்கான வேலை வாய்ப்பு
X

பைல் படம்

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு இடைத்தரகரோ ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்யலாம்

சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய பெண் செவிலியர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் ஊருக்கு அருகிலேயே வந்து பதிவு செய்து கொள்ளலாம்.

இது குறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.என். மகேஸ்வரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவத்துடன் B.sc Nursing தேர்ச்சி பெற்ற 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். மேலும், Data Flow மற்றும் HRD சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். மேற்படி பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமானwww.omcmanpower.com-ல் கண்டுபயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (9566239685, 6379179200), (044-22505886/044-22502267)

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அருகிலேயே பதிவு செய்வதற்கு ஏதுவாக மேலும் 8 மாவட்டங்களில் கீழ்கண்டவாறு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

9.8.2023--10.30 AM to 5.00 PM District Employment and Career Guidance Centre, Thanjavur.

10.8.2023--10.30 AM to 5.00 பின் - District Employment Office and Career,Guidance, MaduraiGovernment ITI Complex,Kpudur, Madurai - 625007.

17.08.2023---10.30 AM to 5.00 PM-- District Employment and Career GuidanceCentre, Villupuram,District Collector Office, கேம்பஸ். - 605602.

21.8.2023 -10.30 AM to 5.00 PM--district Employment and Career Guidance Centre, Salem District Employment and Career Guidance Centre, Salem. Govt. ITI Campus, Yercaud Road,Gorimedu, Salem - 636 008.

29.8.2023--- 10.30 AM to 5.00 PM --District Employment and Career Guidance, Centre, Collector Office கேம்பஸ்,Tirutani Highways

Perumbakkam,Tiruvallore 602 001.

01.9.2023- 10.30 AM to 5.00 PM --District Employment and Carrier GuidanceCentre, Guindy, Chennai - 32

05.9.2023--10.30 AM to 5.00 PM--District Employment Carrier Guidance Centre Government ITI Campus, Chennimalai Road, Erode 638 009.

6.9.2023--10.30 AM to5.00 PM---District Employment and Career GuidanceCentre,Master Plan Complex,Pattinam Kattan villageNear District Collector Complex,Ramanathapuram 623 504.

இந்த முகாமுக்கு வரமுடியாதவர்கள் தங்களுடைய சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவத்தை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத் தரகரோ அல்லது ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.பதிவு மற்றும் மற்றும் பணிவிவரங்களின் தகுதியைப் தகுதியைப் பொருத்து முன்னுரிமை வழங்கப்படும், இந்தப்பணிக்கு தேர்வுபெறும் பணியாளர்களிடமிருந்து சேவைக் கட்டணமாக ரூ.35,400/- மட்டும் வசூலிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்