தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு
X

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே நெல்கொள்முதல்  நிலையத்தை  ஆய்வு செய்த ஆட்சியர்  தீபக் ஜேக்கப்

பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் (25.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் தஞ்சாவூர் உழவர் சந்தையில் காய்கறி வரத்து விலை நிர்ணயம் மற்றும் உழவர் சந்தை காய்கறி கழிவுகளை உரமாக்குதல் இயந்திரம் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் உழவர் சந்தை கடைகளில் உள்ள விவசாயிகள் மற்றும் மகளிர் குழு கடைகள் உழவர் சந்தையில் உள்ள நடைபாதையை ; குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்படும் மாநில அக்மார்க் ஆய்வகத்தின் செயல்பாடு குறித்தும் வேளாண் வணிக வளாகத்தில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூட கிடங்கில் உள்ளநெல் மூட்டைகளின் இருப்பு குறித்தும் ஒரத்தநாடு ஒன்றியம், ஈச்சங்கோட்டை ஊராட்சியில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்,விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ரப்பதம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

ஒரத்தநாடு ஒன்றியம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஈச்சங்கோட்டை ஊராட்சியில் உள்ள நாற்றாங்கால் பண்ணை திருவையாறு ஒன்றியம், அம்மன்பேட்டை ஊராட்சியில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நவீன அரிசி ஆலையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் -CT scan- மையத்தின் செயல்பாடுகள் மற்றும் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குகொண்டு வர வேண்டுமேன சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி வேளாண்மை இணை இயக்குநர் நல்ல முத்துராஜா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.பாலாஜி, நாதன் வேளாண் துணை இயக்குநர் வேளாண் வணிகம் கோ.வித்யாரூபவ் உதவி பொறியாளர் கலைமாமணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா