ஒரத்தநாடு அருகே மதுபோதையில் பாட்டில் குத்து: மூன்று பேர் கைது

ஒரத்தநாடு அருகே மதுபோதையில் பாட்டில் குத்து: மூன்று பேர் கைது
X

பைல் படம்.

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை பாட்டிலால் குத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே திருவோணம் பகுதியை சேர்ந்த ரெங்கராஜ் (32), ரமேஷ் (40), முத்துகுமார் (30), வீராசாமி (34) ஆகிய நான்கு பேரும் அப்பகுதியில் நின்று ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.

அப்போது மது போதையில் நான்கு பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ரமேஷ், முத்துக்குமார், வீராசாமி ஆகிய 3 பேரும் சேர்ந்து ரெங்கராஜனை மது பாட்டிலால் கழுத்து உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ரெங்கராஜ் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பக ரெங்கராஜன் தம்பி முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரமேஷ், முத்துக்குமார், வீராச்சாமி ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

Tags

Next Story
why is ai important to the future