திருக்கானூர்ப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி: 680 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் அனுமதி

திருக்கானூர்ப்பட்டி  ஜல்லிக்கட்டு போட்டி: 680 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் அனுமதி
X
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அனைவரும் உறுதிமொழியை ஏற்று கொண்டனர்

தஞ்சை அருகே திருக்கானூர்ப் பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 680 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் அருகே திருக்கானூர்ப் பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 680 காளைகளும், 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அனைவரும் உறுதிமொழியை ஏற்று கொண்டனர். இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியை ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்த பிறகே களத்தில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கொரோனா தடுப்பூசி இரண்டு தவனைகள் செலுத்திய வீரர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், அண்டா உள்ளிட்ட பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன. போட்டியை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil