ஒரத்தநாட்டில் பட்டாகத்தியுடன் சாலையில் திரிந்த நான்கு பேர் கைது, ஒருவர் தலைமறைவு

ஒரத்தநாட்டில் பட்டாகத்தியுடன் சாலையில் திரிந்த நான்கு பேர் கைது, ஒருவர் தலைமறைவு
X

தஞ்சாவூர் மாவட்டம் ஒரததநாட்டில் சாலையில் பட்டா கத்தியுடன் திரிந்த இளைஞர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓரத்தநாட்டில் பட்டாகத்தியுடன் சாலையில் திரிந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே ஊரடங்கு உத்தரவை மீறி, பட்டா கத்தியுடன், சாலையில் நின்று வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மேலஉளூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், தஞ்சாவூர் –பட்டுக்கோட்டை சாலையில், டூ விலரில் இரண்டு இளைஞர்கள் பட்டாகத்தியுடன் நடுரோட்டில் நின்றப்படி, சாலையில் செல்லும் ஆத்தியாவசிய பணிக்கு செல்வர்களை மிரட்டுவது போலவும், இளைஞர் ஒருவர் வாயில் கத்தியை வைத்து ரவுடி போல போஸ் கொடுத்தும்,

மற்றொரு இளைஞர் கர்ணன் பட பாடலுக்கு பின்னியில் கத்தியை வைத்து சாலையில் செல்லபவர்களை அச்சுறுத்தும் விதமாக வீடியோக்களை எடுத்து பேஸ்புக்,வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து இந்த வீடியோக்கள் வைரலான நிலையில், ஒரத்தநாடு போலீசார் விசாரணை நடத்தி, வீடியோவில் உள்ள முகேஷ்குமார், சந்தோஷ்குமார்,, தங்கமுத்து, கபிலன்,, எனவும், திருப்பூரில் பணியாற்றிய நிலையில், ஊடரங்கு காரணமாக ஊருக்கு வந்த நிலையில், வீடியோ எடுத்து வெளியிட்டது தெரியவந்தது.

உடனே அவர்களை ஒரத்தநாடு போலீசார் 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள வெங்கடேஷன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future