ஒரத்தநாட்டில் சிலம்பம் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் சகோதரிகள்
.தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடிமேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். லாரி டிரைவர். இவரது மனைவி தனலெட்சமி. இவர்களின் மகள்களான திவ்யா(21).எம்எஸ்சி பயோ டெக்னலாஜி, தீபிகா(21), எம்எஸ்சி புவியியல் படித்து வருகின்றனர்.
இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக, தங்கள் கிராமத்தில், சோழா சிலம்பம் மற்றும் கரத்தே பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்களிடம், கிராமப்புரத்தை சேர்ந்த சிறுவர்கள் மாணவ,மாணவிகள் என 350 பேர் பயிற்சி பெற்று வருகின்றர்.
இந்நிலையில் நேற்று, 33 மாணவ, மாணவிகளை கொண்டு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, அனைவரும் முகக்கவசம் அணிந்து, ஒரு மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றினர். மேலும், அவர்கள் கபசுரக்குடிநீரையும் குடித்தனர்.
இதுகுறித்து திவ்யா கூறுகையில்; தற்காப்பு கலை என்பது அனைவருக்கும் கட்டாயம். சிலம்பம் தற்காப்பு கலை என்பதை தாண்டி, உடலில் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி நோய்களை தடுக்க உதவும்.
எங்களிடம் பயிற்சி பெற்றவர்களில் 21 பேர் மாநில அளவிலும், 2 பேர் தேசியளவிலான போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். அத்துடன் மதுரையில் இரு ஆண்டுகளுக்கு முன் நடந்த மாநிலளவிலான போட்டியில் சிறந்த குழு, சிறப்ப பயிற்சியாளர் பரிசை பெற்றுள்ளோம்.
தற்போது கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு மணி நேரம் இடைவெளி இல்லாமல், முககவசம் அணிந்து சிலம்பம் சுற்றினோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu