தஞ்சாவூர் மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு சுகாதார முகாம் : அமைச்சர் தொடக்கம்
ஈச்சங்கோட்டைஊராட்சியில் சிறப்பு சுகாதா முகாம் “நம்ம ஊரு சூப்பரு” என்ற திட்டத்தின் செயல்பாட்டினை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஈச்சங்கோட்டைஊராட்சியில் சிறப்பு சுகாதா முகாம் "நம்ம ஊரு சூப்பரு" என்ற திட்டத்தின் செயல்பாட்டினை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் தொடக்கி வைத்தார்.
பின்னர் பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது: முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க ஊரகப்பகுதிகளில் தூய்மையான குழநீர். சுகாதாரம் திடமற்றும் திரவக்கழிவு மேலாண்மை ஆகியவை தொடர்பான விழிப்பணர்வினை ஏற்படுத்திடவும் அதன் மூலம் நம்ம ஊரு சூப்பரு முகாம்கள் நடத்தி ஊரகப் பகுதிகளில் தூய்மையை பராமரித்திடவும், தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்கிடவும் அதன் மூலம் சுகாதாரம் உற்பத்தி திறன், பாதுகாப்பு மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கு முக்கியமாக தேவையானவற்றை உயர்த்துவதற்கும் தேவையான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி முதற்கட்டமாக 20-08-2022 முதல் 02-09-2022 முடிய ஊரகப்பகுதிகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடிகள் மற்றும் அரசுக்கட்டிடங்களில் முகாம்கள் நடத்தி தூய்மையை பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தினசரி மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விவரங்களை நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் பயனடையும் இதர துறைகளான தமிழ்நாடு ஊரக வாழ்வாதாரத் திட்டம். பள்ளிக்கல்வி. உயர்க்கல்வி. வருவாய்த்துறை. சுகாதாரம் மற்றும் குடும்ப நலம். சமூகநலம், வனத்துறை. உணவு பாதுகாப்பு, சுற்றுலாத்துறை. இந்துசமய அறநிலையத் துறை, நகராட்சிநிர்வாகம் மற்றும் குழநீர் விநியோகத்துறை, பொதுப்பணித்துறை, மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் ஆகியவற்றையும் ஒருங்கிணைத்து முகாம்களை நடத்திடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நம்ம ஊர் சூப்பர் முகாமில் பொது நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் தூய்மைபணிகள் மேற் கொள்ளுதல். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குழநீர், சுகாதாரம், கழிவு மேலாண்மை தொடர்பாக விழிப்புணர்வு முகாம், சுய உதவிக்குபுக்கள் உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் வீடுகளில் குழநீர். சுகாதாரம், கழிவு நீர் மேலாண்மை தொடர்பாக விழிப்புணர்வு முகாம், ஓருமுறைபயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழி பொருளினை தடை செய்து அதற்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தூய்மையான மற்றும் பசுமையான கிராமங்கள் தொடர்பாக விழிப்புணர்வு அளித்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகள் செயல்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக ஒரத்தநாடு வட்டாரம் ஈச்சங்கோட்டை ஊராட்சியில் நடைபெற்றுவரும் சிறப்பு தூய்மைப் பணிகளை தொடங்கி வைக்கப்பட்டது என்றார் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) என்.ஓ.சுகபுத்ரா , கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஸ்ரீகாந்த் , சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் வட்டாட்சியர்கள் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu