மதிமுக துணை பொதுச்செயலாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

மதிமுக துணை பொதுச்செயலாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு
X
மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் துரை பாலகிருஷ்ணன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

ஒரத்தநாடு ஒன்றியம் வடக்கூர் கிராமம், இவரது சொந்த ஊர். பெற்றோர், துரைசாமி-பார்வதி அம்மையாரின் மகன், மனைவி பெயர் பொன்னம்மாள். மகள் சமதர்மம் மகன் ஆசைத்தம்பி

பேரறிஞர் அண்ணா அவர்களின் இயக்கத்தில், இளம்பருவத்திலேயே தன்னை ஒப்படைத்துக் கொண்டு, 1972 முதல் 1993 வரை ஒரத்தநாடு தி.மு.க. ஒன்றியச் செயலாளராக, நீண்டகாலம் பணி ஆற்றினார்.

1986 முதல் 1991 வரை ஒரத்தநாடு ஒன்றியப் பெருந்தலைவராகவும், 1996 முதல் 2001 வரை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராகவும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2006 முதல், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக உள்ளார்.

கலைஞர் கருணாநிதி, வைகோ மீது கொலைப்பழி சுமத்தியதைக் கண்டித்ததால், தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். 1993 முதல் 2008 வரை மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளராகவும், தற்போது, மாநில துணைப் பொதுச் செயலாளராகவும் பணி ஆற்றி வந்தார்.


Tags

Next Story
நீங்க ஒழுங்கா தூங்குறீங்களா? உங்க குழந்தைங்க....! கட்டாயம் கவனிங்க..!