பேரிடர் காலங்களில் கால்நடைகளின் மேலாண்மை: மருத்துவர்களுக்கு பயிற்சி

பேரிடர் காலங்களில் கால்நடைகளின் மேலாண்மை: மருத்துவர்களுக்கு பயிற்சி
X

பைல் படம்

கால்நடைகளை பராமரித்தல் குறித்த தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டால் பேரிடர் காலங்களில் அதைப் பயன்படுத்த உதவும்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பேரிடர் காலங்களில் கால்நடைகளின் மேலாண்மை குறித்து மூன்று நாள் பயிற்சி வகுப்பினை மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பயிற்சிக்கான கையேட்டை வெளியிட்டு பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து பேசியதாவது:

ஒரத்தநாடு கால்நடைமருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 'பேரிடர் காலங்களில் கால்நடைகளின் மேலாண்மை' என்ற தலைப்பில் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த 60 கால்நடை மருத்துவர்களுக்கு 12.10.2022 முதல் 14.10.2022 வரை நடத்தப்பட உள்ள மூன்று நாள் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

இப்பயிற்சியின் மூலம் கால்நடை உதவிமருத்துவர்கள் பேரிடர் காலங்களில் கால்நடைகளைப் பராமரித்தல் குறித்ததொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டு,பேரிடர் காலங்களில் அவற்றைப் பயன்படுத்தி கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் ஆட்சித் தலைவர்.

உலக விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு உலகம் முழுவதும் ஆண்டுக்கு ஆண்டு 20-க்கும் மேற்பட்ட பேரிடர்களில் தனது பங்களிப்பை அளித்து வருகிறது. இதுபோன்று தொடர் பாதிப்புகளை சந்தித்து வரும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தாய்லாந்து போன்ற நாடுகள் தங்களது பேரிடர் மேலாண்மைக் கொள்கையில் கால்நடைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வகுத்துள்ளன.

இதுபோல் இந்தியாவும் பேரிடர் மேலாண்மைக் கொள்கையில் கால்நடைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் . வெள்ள பாதிப்பு, நிலச் சரிவு மற்றும் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களின்போது மக்கள் கால்நடைகளை கைவிட்டு விடுவது வாடிக்கையாகி வருகிறது.அண்மையில், கேதர்நாத் வெள்ள பாதிப்பின்போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் இதுபோன்று அதன் உரிமையாளர்களால் கைவிடப்பட்டன.அவ்வாறு கைவிடப்பட்ட கால்நடைகள் பட்டினியால் வாடியதோடு நோய் பாதிப்புக்கும் ஆளான அவலமும் நேரிட்டது. இதைத்தடுக்க வேண்டுமென

முன்னதாக ஒரத்தநாடு கால்நடைமருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் இணைந்து தஞ்சை மாவட்டத்தில் வனப்பரப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 2000 மரக்கன்று நடும் விழாவினை மாவட்டஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.

மேலும் 'வீடுதோறும் விருட்சம்" என்ற நோக்கில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்வதற்கான 'மரக்கன்று நாற்றங்கால் உற்பத்தி' செய்யும் திட்டத்தில் முதல் விதையை மாவட்ட ஆட்சியர் விதைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒரத்தநாடு கால்நடைமருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர். நா. நர்மதா, தஞ்சாவூர் கால்நடைபராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் கே.தமிழ்செல்வம்,உதவி இயக்குநர் ஐ.சையத் அலி, கவின்மிகு தஞ்சை இயக்கதலைவர் ராதிகாமைக்கேல், ஒரத்தநாடு ஒன்றியப் பெருந்தலைவர் பார்வதிசிவசங்கர், கக்கரை ஊராட்சிமன்றத் தலைவர் தமிழ்மணி, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.மணிவண்ணன், உதவிப் பேராசிரியர் முனைவர்.வெ.சசிகலா, முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்