ப்ளக்ஸ் பேனர் விழுந்து பெண் பலி - தஞ்சையில் சோகம்!

ப்ளக்ஸ் பேனர் விழுந்து பெண் பலி - தஞ்சையில் சோகம்!
X
தஞ்சாவூர் அருகே, பிளக்ஸ் பேனர் சரிந்து விழுந்ததில், டூவிலரில் சென்ற பெண் உயிரிழந்தார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள மேலமேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவீரப்பன். அவரது மகன் ரவிச்சந்திரன். சில தினங்களுக்கு முன்பு ரவிச்சந்திரனின் தந்தை முத்துவீரப்பன் காலமானார். மேல மேட்டுப்பட்டி நெடுஞ்சாலையில், ரவிச்சந்திரன் தனது தந்தையின் பட திறப்பு விழாவிற்கு பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார்.

அப்போது, அந்த வழியாக வந்த, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அம்மணிபட்டு கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மனைவி விஜயராணி என்பவர், அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில், பிளக்ஸ் பேனர் விஜயராணி மீது சரிந்து விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த விஜயராணியை மீட்டு அவ்வழியாக சென்றவர்கள், தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவோணம் போலீசார், பிளக்ஸ் பேனரை கைப்பற்றி, பிளக்ஸ் பேனர் வைத்த ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதனிடையே, படுகாயமடைந்த விஜயராணி, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். பிளக்ஸ் பேனர் வைக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டும், விதிமுறைகளை கடைபிடிக்க உள்ளாட்சி, ஊராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை வருவாய்த் துறையின் அலட்சியப் போக்குடன் உள்ளனர். இதனால், இதுபோன்ற விபத்து உண்டாவதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!