நிலுவைத்தொகை வழங்க, சக்கரை ஆலை முன் கரும்புடன் விவசாயிகள் போராட்டம்

நிலுவைத்தொகை வழங்க, சக்கரை ஆலை முன் கரும்புடன் விவசாயிகள் போராட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்.

தஞ்சாவூர் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சக்கரை ஆலை முன்பு கரும்புடன் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதிக்கு உட்பட்ட குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகை 18 கோடியை இதுவரை வழங்கவில்லை.

இந்நிலையில், நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டி கரும்பு அறிஞர் அண்ணா சக்கரை ஆலை முன்பு கரும்புடன்விவசாயிகள் பாோராட்டத்தில் ஈடபட்டனர்.

மேலும், கரும்பு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்து அறிக்கை வெளியிட வேண்டும்.சர்க்கரை ஆலை பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் நீர் ஆதாரத்தை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து குருங்குளம் அறிஞர் அண்ணா சக்கரை ஆலை முன்பு தமிழக கரும்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா