ஒரத்தநாடு பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

ஒரத்தநாடு பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு
X

பலியான விவசாயி கனகராஜ்.

தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு தாலுகா கீழவன்னிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ், விவசாயி வயது 40. இவர் மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக பக்கத்து ஊரான அருமலை பகுதியில் தென்னந்தோப்பில் புல் அறுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்சார கம்பி மீது கனகராஜ் மீது பட்டு மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே கனகராஜ் இறந்துள்ளார்.

மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக சென்ற கனகராஜ் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. இவரது மனைவி சரண்யா சந்தேகமடைந்த அருகிலுள்ள பகுதிகளில் தேடி வந்துள்ளார். அப்போது அருமலை தென்னந்தோப்பில் கனகராஜ் இறந்து கிடப்பது தெரியவந்தது தகவலறிந்த பாப்பாநாடு போலீசார் தற்போது கனகராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதேபோல் மின்சாரத்தினால் தற்போது தஞ்சை மாவட்டம் களிமேடு பகுதியில் கடந்த வாரம் தேர் மின்சார தீ விபத்தில் 11 பேர் இறந்துள்ளனர். தற்போது ஒரத்தநாட்டில் விவசாயி இறந்துள்ளார். திமுக அரசு இதை இன்னும் கண்டுகொள்ளவில்லை. மின்சாரத்துறை தாழ்வான மின்சார கம்பிகளை அகற்றவில்லை, இதுவரை சரி செய்யவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!