பயிர் காப்பீடு திட்டத்தை உடனடியாக அறிவிக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை

பயிர் காப்பீடு திட்டத்தை உடனடியாக அறிவிக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை
X
பைல் படம்.
இந்த ஆண்டு குறுவை பயிருக்கான காப்பீட்டு திட்டத்தை அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது டெல்டா முழுவதும் 3.50 லட்சம் ஏக்கரும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.15 லட்சம் ஏக்கரும் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை பயிர் காப்பீடு செய்ய, காப்பீட்டு நிறுவனங்கள் முன்வரவில்லை.

மேலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட சேதங்களுக்கு, இதுவரை காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு, காப்பீடு திட்டத்தை அரசு இதுவரை அறிவிக்கவில்லை, இதனால் மழை - வறட்சி காரணமாக பயிர் பாதிப்பு ஏற்பட்டால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கும் நிலையில் உள்ளனர்.

விவசாயிகள் மழை வெள்ளத்தாலோ, வறட்சியாலோ பாதிக்கப்படும் போது, விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஐந்தாயிரம் முதல் அதிகபட்சமாக முப்பதாயிரம் ரூபாய் வரை பயிர் பாதிப்பைப் பொறுத்து இழப்பீட்டு தொகை கிடைக்கும். பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக பெரும் இழப்பு ஏற்படுவதால், மத்திய மாநில அரசுகளிடம் 25% அதாவது, ஏக்கருக்கு 8,500 ரூபாய் பிரீமியம் தொகை கேட்பதால், அரசு இதற்கு ஒப்புக் கொள்ளாதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

ஜூலை 31 ஆம் தேதிக்குள், குறுவை இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை செலுத்த வேண்டும். ஆனால் அரசு இதுவரை காப்பீடு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை, எனவே உடனடியாக பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால், காப்பீடு செய்ய காலஅவகாசம் நீட்டிக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags

Next Story
ai marketing future