ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு - கொலையா என போலீசார் விசாரணை

ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு - கொலையா என போலீசார் விசாரணை
X
ஒரத்தநாடு அருகே ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றி, போலீஸ் விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கொடாமாங்கொல்லை சிறு வாய்க்காலில், 35 வயது மதிக்க தக்க ஆண் சடலம் ஒன்று ஆற்றில் கரை ஒதுங்கி உள்ளது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து, இது குறித்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்து வந்த ஒரத்தநாடு போலீசார், சடலத்தை கைப்பற்றி, ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது நெஞ்சில் பாத்திமா என்றும் அவரது வலது கையில் வள்ளி என்றும் பச்சை குத்தியுள்ளார். தற்போது அவரது உடல் ஓரத்தநாடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா, இல்லை கொலை செய்யப்பட்டாரா, இல்லை தற்கொலை செய்து கொண்டாரா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!