கொரோனா பாதித்த மாணவர்கள் எண்ணிக்கை 225 ஆக உயர்வு

கொரோனா பாதித்த மாணவர்கள் எண்ணிக்கை 225 ஆக உயர்வு
X

ஒரத்தநாடு கால்நடை கல்லூரி மாணவர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்த மாணவர்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கனவே 13 பள்ளிகளை சேர்ந்த 187 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 90 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 4 கல்லூரிகளை சேர்ந்த 18 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை கல்லூரி மாணவர் ஒருவருக்கு ஏற்கனவே தொற்று இருந்தது.

இதனால் அங்கு படிக்கும் 420 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தற்போது 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பள்ளி மாணவர்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 187 ஆகவும், கல்லூரி மாணவர்களின் பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. மொத்த மாணவர்களின் பாதிப்பு 225 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!