தஞ்சையில் வைத்திலிங்கம் தலைமையில் அதிமுகவினர் போராட்டம்

தஞ்சையில் வைத்திலிங்கம் தலைமையில்  அதிமுகவினர் போராட்டம்
X

தஞ்சையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர் வைத்திலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கேட்டு, தஞ்சையில் வைத்திலிங்கம் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், திமுக அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் மாவட்டம், தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று, அதிமுக தலைமை அறிவித்தது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 தாலுகா அலுவலகம் முன்பும், இன்று அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள தாலுக்கா அலுவலகம் முன்பு, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர் வைத்திலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காத திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர், அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai marketing future