பள்ளிக்கல்வித் துறை சார்பில் நாட்டுநலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்கம்

பள்ளிக்கல்வித் துறை சார்பில் நாட்டுநலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்கம்
X

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நாட்டுநலப்பணித் திட்ட சிறப்பு முகாமினை பள்ளிக்கல்வி ஆணையர் ம.நந்தகுமார், மாவட்டஆட்சித் தலைவர் .தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் முன்னிலையில் பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  துவக்கிவைத்து பேசினார்

தொடர் செயல்பாடுகளுக்குரூ.183 இலட்சமும், சிறப்பு முகாம்கள் நடத்த ரூ.164 இலட்சமும் ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நாட்டுநலப்பணித் திட்ட சிறப்பு முகாமினை பள்ளிக்கல்வி ஆணையர் ம.நந்தகுமார், மாவட்டஆட்சித் தலைவர் .தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் முன்னிலையில் பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (29.10.2020) துவக்கி வைத்தார்.

பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம்,கல்லணையில் பள்ளிக் கல்வித் துறைசார்பில்நாட்டுநலப்பணித் திட்டம் சிறப்புமுகாம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.எந்தவொரு செயலும் தமக்காக மட்டுமல்லாமல் பிறருக்கும் தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும் என்பதே நாட்டுநலப்பணித் திட்டத்தின் குறிக்கோள். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 24ஆம் தேதி நாட்டுநலப்பணித் திட்டநாளாக கொண்டாடப்படுகிறது.

இம் முகாமின் நோக்கமானது மாணாக்கர்களும் தாங்கள்வாழும் சமூகத்தை புரிந்துகொள்ளுதல், தங்களுக்கும் சமூகத்திற்கும் இடையே உள்ள தொடர்பினை புரிந்து கொள்ளுதல் சமுதாயத்தில் உள்ள தேவைகளையும், பிரச்சனைகளையும் அடையாளம் கண்டு அதனை நிவர்த்திக்க தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல், -சமூகத்தின் பொறுப்புணர்வை மேம்படுத்திக் கொள்ளுதல் மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்ளுதல் இயற்கைப் பேரழிவு மற்றும் நெருக்கடி சூழ்நிலையை கையாளும் திறன்களை வளர்த்துக் கொள்ளுதல்,தேசியஒற்றுமைக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் பாடுபடுதல் ஆகும்.

நாட்டுநலப்பணித் திட்டம் செயல்படும் ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியும் ஒரு அமைவாக கருதப்படும். ஒவ்வொரு அமைவிலும் 11-ஆம் வகுப்பில் 25 மாணவர்களும் 12-ஆம் வகுப்பில் 25 மாணவர்களும் எனமொத்தம் 50 மாணவர்கள் இருப்பார்கள். தமிழ்நாட்டிலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 1,953 நாட்டுநலப்பணித் திட்டஅலகுகளில் 76307 மாணவர்களும் 21343 மாணவிகள் என 97,650 மாணாக்கர்கள் தன்னார்வ நோக்கோடு செயலாற்றி வருகின்றனர்.

இந்தசிறப்புமுகாமில் ஒவ்வொரு மாணவத் தொண்டரும் ஒருஆண்டுக்கு குறைந்தபட்சம் 120 மணிநேரம் தொடர் பணியில் ஈடுபடவேண்டும். இப்பணிகள் பள்ளி வளாகத்திலும் பள்ளிக்கு வெளியிலும் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களிலும் செயல்படுத்தவேண்டும்.

2022-23ஆம் கல்வி ஆண்டிற்கான நாட்டுநலப்பணித் திட்டசிறப்பு முகாமானது பின்தங்கிய கிராமங்களை தேர்ந்தெடுத்து இன்று முதல் 7 நாட்கள் அனைத்து மாவட்டங்களில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மேலும், இந்தசிறப்புமுகாம் செயல்பாட்டுத் திட்டத்தினைமுன்னதாகவேதயாரித்து. கிராமங்களைத் தத்தெடுக்கும்போது அம்மக்களுக்கு என்னென்னதேவை என்பதை சேகரித்து, பின்புமுகாம்கள் நடத்துதல் வேண்டும். முகாம்கள் நடைபெறும் கிராமத்தில் உள்ளதலைவர்களை சந்தித்து கிராமமேம்பாட்டுத் தேவைகளின் அடிப்படையிலேயே தொடர்ந்து 3 ஆண்டுகள் சிறப்பு முகாம் நடத்துதல் வேண்டும்.

பொருத்தமான இடத்தைகுறைந்தது 30 நாட்களுக்கு முன்னரே தேர்வு செய்து இடம்.சமையல் இடம். குடிநீர்,குளிக்க வசதிகள்,கழிப்பிடம் தங்கும் உள்ளிட்டவைகளை அவசியம் கருத்தில் கொண்டு. மாணவர்கள் பாதுகாப்புகருதிநீர் நிலைகள், குளம் மற்றும் ஏரி முதலியவைகளுக்கு அருகில் இல்லாதவாறு தங்குமிடம் தேர்வு செய்யவேண்டும்.

மேலும் நாட்டுநலப்பணித் திட்டமானது சுகாதார முகாம்கள், இரத்ததான முகாம்கள் மற்றும் விழிப்புணர்வுப் பேரணிகள்,மரம் நடுதல் முதலான சமூகசேவைத் திட்டங்களில் தன்னார்வநோக்கத்தோடு பணியாற்ற மாணவர்களை ஊக்குவிப்பதன் மூலம்,மாணாக்கர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு வித்திடுவதாக அமைந்துள்ளது. 2021-22ஆம் கல்வியாண்டில் நாட்டுநலப்பணித் திட்ட தொடர் பணி மானியம் சிறப்பு முகாம் மானியமாக ரூ.3.47,87,813 அனுமதிக்கப்பட்டுள்ளது. 2021-22ஆம் ஆண்டிற்கான பெறப்பட்ட மானிய தொகையிலிருந்துரூ.3,18.58.313-நிதியை அனைத்து மாவட்டங்களில் உள்ள 1953 அமைவுகளுக்கு General Component Plan -வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு சார்ந்த பள்ளி வங்கிக் கணக்கிற்கு PFMSK முறையில் விடுவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் தொடர் செயல்பாடுகளுக்குரூ.183 இலட்சமும், சிறப்பு முகாம்கள் நடத்த ரூ.164 இலட்சமும் ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றார் அமைச்சர் அன்பில்மகேஸ்பொய்யாமொழி.

பின்னர் தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம்,கல்லணையில் உள்ள விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டரங்கில் பள்ளி கல்விதுறையின் சார்பில் சீசேஞ்ச் கல்வித்திட்டம் மற்றும் ராம்கோசி மெண்ட் நிறுவனம் இணைந்துபள்ளி ஆசிரியர்களுக்கு பெரும் கடல்களையும் கடல் வாழ் உயிரினங்களையும் மாசுபாட்டிலிருந்து பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருவையாறு சட்டமன்றஉறுப்பினர் துறைசந்திரசேகரன், நாட்டுநலப்பணித்திட்டம் இணை இயக்குனர் முனைவர்.ஆ.அனிதா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் அமுதவள்ளி, முதன்மைகல்வி அலுவலர்கள் மு.சிவகுமார்(தஞ்சாவூர்) பாலமுருகன் (திருச்சிராப்பள்ளி), பூதலூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் செல்லக்கண்ணு மற்றும் அரசுஅலுவலர்கள்பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!