சுவாமிமலை ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வழங்காததால் பெண்கள் காரசார விவாதம்

சுவாமிமலை ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வழங்காததால் பெண்கள் காரசார விவாதம்
X

ரேஷன் கடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட  பெண்கள்.

சுவாமிமலையில் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வழங்காத காரணத்தால் பெண்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

கும்பகோணம் அருகே சுவாமிமலை பேரூராட்சியில் உள்ள சர்வமானிய தெருவில் உள்ள ரேஷன் கடையில் சுமார் 1150 ரேஷன் கார்டுகள் உள்ளது. இந்த ரேஷன் கார்டுகளுக்கு தொடர்ந்து ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் உட்பட அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரு தினங்களும் காலை மாலை இருவேளையும் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. சுவாமிமலை பகுதி பொதுமக்கள் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருவதை அறிந்து தங்கள் ரேஷன் கார்டுடன் சென்று ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் பதிவு செய்வதற்கு ரேஷன் கடை ஊழியரிடம் ரேஷன்கார்டு கொடுத்தனர்.

அப்போது அவர் அந்த ஆன்லைன் மெஷினில் ஸ்கேன் செய்தபோது சுமார் 50 பேருக்கு மண்ணெண்ணெய் இல்லை என்று வருகிற தகவலை கூறியவுடன் பெண்கள் அனைவரும் யாரைக் கேட்டு மண்ணெண்ணெய் வழங்குவதை ரத்து செய்தீர்கள் என்று ரேஷன் கடை ஊழியரிடம் சண்டையிட்டனர்.

மேலும் இந்த சம்பவம் சுவாமிமலை முழுவதும் பரவி யார் யாருக்கு மண்ணெண்ணெய் இல்லை? யார் யாருக்கு உண்டு? என்பதை அறிவதற்காக சுவாமிமலை ரேஷன் கடைக்கு மக்கள் கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை உடனே தமிழக அரசு நடவடிக்கை எடுக்க சுவாமிமலை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!