தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ முகாம் மற்றும் பால் உற்பத்தி கருத்தரங்கம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ முகாம் மற்றும் பால் உற்பத்தி கருத்தரங்கம்
X

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவிடைமருதூர், நாகரசம்பேட்டையில் நடைபெற்ற கால்நடை சிறப்பு  மருத்துவ முகாம்

பால்வளத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் இந்த மருத்துவமுகாம் நடைபெற்றது

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவிடைமருதூர், நாகரசம்பேட்டையில் கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்லிட் தஞ்சாவூர் (பால்வளத்துறை) மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூறாவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு மாபெரும் கால்நடை மருத்துவ முகாம் மற்றும் பால் உற்பத்தி கருத்தரங்கம் மாவட் டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் மாநிலங்களவை உறுப்பினர் எஸ் கல்யாணசுந்தரம் முன்னிலையில் இன்று (29.07.2023) நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணம் வட்டம், திருவிடைமருதூர் நாகரசம்பேட்டையில் கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்லிட் தஞ்சாவூர் ( பால்வளத்துறை ) மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் சார்பில் மாபெரும் கால்நடைமருத்து வமுகாம் மற்றும் பால் உற்பத்தி கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.

இம்முகாமில் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் பால்வளத் துறைசார்பாக துறை செயல்பாடுகளை விளக்கும் கண்காட்சி கூடங்கள்,மக்களுக்கு கால்நடை பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன மற்றும் இம்முகாமில் கிடேரி கன்றுகளுக்கான பேரணி நடத்தப்பட்டு அவற்றில் சிறந்த 3 கிடேரி கன்றின் உரிமையாளர்களுக்கு பரிசளிக்கப்பட்டன. சிறந்த முறையில் கால்நடைகளை பராமரித்து , அதிக பால் உற்பத்தி செய்யும் 3 விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இம்முகாமில் 260 கால்நடைகளுக்கான சிகிச்சை 836 கால்நடைகளுக்கு குடற் புழு நீக்கம், 32 கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவுட்டல்,123 கால்நடைகளுக்கு சினை பரிசோதனை முதலான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும்,சினைபிடிக்காத 58 மாடுகளுக்கு சிறப்பு மலடு நீக்க சிகிச்சை களையும், தாது உப்புக் கலவை பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டன. அத்துடன் கால்நடை வளர்ப்பவர்கள் பயனடையும் வகையில் கால்நடைகளின் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான மேலாண்மை முறைகளை விளக்கும் விளக்க கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தை சார்ந்த பேராசிரியர் முனைவர் ஜெகதீசன் கலந்து கொண்டு உரையாற்றினார். அத்துடன் இம்முகாமில் கால்நடைகளை கொண்டு வந்து பயனடைந்த கால்நடை வளர்ப்போர்கள் அனைவரையும் ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் 7 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து 108 கறவை மாட்டுக் கடனுக்கான விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு 76 பயனாளிகள் தேர்வுசெய்யப்பட்டு தொடக்கமாக கும்பகோணம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுசங்க 3 உறுப்பினர்களுக்கு தலா ரூபாய் 80,000 கடனுதவி இன்று வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கால்நடைபராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் .மு. சுப்பையன், ஆவின் பொது மேலாளர் ராஜசேகர் எஸ்.கரிஷெட்டி, வருவாய் கோட்டாட்சியர் செ.பூர்ணிமா, துணைபதிவாளர் சோ. க.விஜயலட்சுமி, திருவிடைமருதூர் ஒன்றியப் பெருந்தலைவர் சுபாதிருநாவுக்கரசு கும்பகோணம் வட்டாட்சியர் பு.வெங்கடேஸ்வரன், மாவட்டஊராட்சி குழு உறுப்பினர் சா.சரவணன், கூகூர் ஊராட்சிமன்ற தலைவர் சி.அம்பிகாபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story