கும்பகோணம் மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப். பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப். பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம் கோட்டையூரில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரி வளாகத்தில் ரூபாய்14.8 கோடி மதிப்பில் கல்லுாரி விரிவாக்க புதிய கட்டடம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, கும்பகோணம் மாநகராட்சி சார்பில் தங்கவிலாஸ் நகரில் மாநகராட்சியின் இரண்டாவது மண்டல அலுவலக கட்டடம் ரூபாய் 2.35கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்து, காந்தியடிகள் சாலையில் அறிவுசார் மைய புதிய கட்டடம் ரூபாய் 2.62 கோடி மதிப்பில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், கும்பகோணம் மாநகராட்சி அறிஞர்அண்ணா சாலை அருகே ஓலைப்பட்டிணம் வாய்காலில் மேற்கொள்ள வேண்டி மேம்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்து காந்தியடிகள் சாலை அருகே செயல்படும் பொது விநியோக திட்ட அங்காடியில் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், கும்பகோணம் மாநகராட்சி அரசு கல்லுாரி வளாகத்தில் உள்ள ராமானுஜம் வளாகம் பாரம்பரிய முறையில் கட்டடம் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இந்த ஆய்வின் போது கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமா , மாநகராட்சி ஆணையர் இரா.லெட்சுமணன் , வட்டாட்சியர் பு.வெங்கடேஸ்வரன் , உதவி செயற் பொறியாளர் சதிஸ்பாபு , செயற் பொறியாளர் லோகநாதன் , உதவி பொறியாளர்கள் சந்திரபோஸ் , விஜயலெட்சுமி , பிரேமா மற்றும் பலர் கலந்துண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu