கும்பகோணத்தில் அரசு சார்பில் வள்ளலார் முப்பெரும் விழா
பைல் படம்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அரசு சார்பில் வள்ளலார்-200 முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை(13.8.2023) நடைபெறுகிறது.
இந்துசமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை (எண்.47 சட்டமன்ற அறிவிப்பு 2022-2023 -ஆம் ஆண்டு அறிவிப்பின் (எண். 22-) படி, உயிர்த்திறள் ஒன்றெனக் கூறி தனிப்பெருங் கருணை ஆட்சி நடத்திய அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமான் தருமசாலை தொடங்கிய 156 -ஆவது ஆண்டு தொடக்கமும் (25.05.2022) வள்ளல் பெருமான் இவ்வுலகிற்கு வருவிக்க உற்ற 200-ஆவது ஆண்டு தொடக்கமும் (05.10.2022) வள்ளல் பெருமான் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-ஆவது ஆண்டு (05.02.2023) இம்மூன்று நிகழ்வுகளையும் இணைத்து அவரது 200 -ஆவது அவதார ஆண்டான அக்டோபர் 2022 முதல் அக்டோபர் 2023 வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மயிலாடுதுறை மண்டலம், கும்பகோணம், இந்துசமய அறநிலையத்துறை சார்பாக 13.08.2023 (ஞாயிற்றுக்கிழமை) கும்பகோணம், மகாமகக்குளம் தென்கரையில் உள்ள ஹரிதா மஹாலில் அரசு விழா நடைபெறுகிறது.
இதில், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள், மயிலாடு துறை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு, ஞானதீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி காலை 6 மணிக்கு தொடங்கி, தொடர்ச்சியாக. நிகழ்ச்சி நிரலின்படி, மாலை 5.30 மணிவரை வள்ளலார்-200 முப்பெரும் விழா நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu